காய்ந்தவர் வள்ளி வெறியாட்டாம் வாய்ந்த
சுரநடை மாதர் வருத்தம்; சுரனுள்
முதுபாலை தன்னை மொழியின் மதுமலர்த்தார்க்
காவலன் வீயக் கவன்ற ததுவாகும்
பாசறை முல்லை தலைமகன் பாசறைக்கண்
மாசறு மாதரை யுள்ளுதல்; மாசற்ற
இல்லவள் முல்லையும் அஃதேயாம்; சொல்லுங்காற்
குற்றிசை கோல்வளை யாளைத் தலைமகன்
முற்றத் துறந்த துறவாம் ; குறுங்கலி
முற்றத் துறந்த தலைமகனை முன்னின்று
பொற்றொடி மாதர் பழிதூற்றாம்; குற்றந்தீர்
தாபதம் காதற் றலைமகனை நீங்கிய
மேவரு மாதர் நிலையாகும்; மேவருஞ்சீர்
நீக்கப்பட் டாளை யுவந்த தலைமகன்
பார்த்துறூஉந் தன்மை யதுவாம் தபுதாரம்;
பத்து மகத்தின் புறம்."
கைக்கிளையாவது, ஒருதலைக் காமம்.
பெருந்திணை என்பது, பொருந்தாக் காமம்.
(12)
98. புறமும் புறப்புறமும்
வெட்சி கரந்தை விறல்வஞ்சி காஞ்சி யுழிஞைநொச்சி
உட்கிய தும்பையென் றேழும் புறமுயர் வாகைதன்பின்
கொட்கும் பொதுவியல் பாடாண் புறப்புறங் கொண்டிவற்றை
உட்கு மதுவிட் டுரவோ ருரைப்படி யோர்ந்தறியே.
(இ-ள்.) இதனாற் புறமும் புறப்புறமும் அறிக (எ-று.) இனிப் புறப்பொரு ளேழையுஞ் சில விகற்பிக்குமாறு:
(13)
99. வெட்சியின் வகை
ஒருப்பாடு நற்சொற் செலவொற் றுரைப்புப் புகல்பொருதல்
விருப்பா நிரைகொண் டவரைத் தடுத்தல் நெறிசெலுத்தல்
செருப்பாடு கைப்படை காத்தூர் புகல்திறங் கூறிடுதல்
பருப்பாடு பாலாற் களித்தல்வெட் சித்திறம் பான்மொழியே !
(இ-ள்.) இவை ஒருப்பாடு முதலிய வெட்சி விகற்பமாம். வெட்சியாவது, நிரை கவர்தற்பொருட்டு ஒருப்படுதலும், உரை சொல்லாய்தலும், அங்கு நோக்கிப் படையெழுதலும், ஒற்று வினையுரைத்தலும், நிரை நின்ற விண்டுவினைச் சூழ்போதலும், பொருதலும்,