நிலையாவது, கையறு நிலையும் தபுதார நிலையும் தாங்கிய நிலையும் தலைமைப் பெயல் நிலையும் என்ப.
அவற்றுள் கையறு நிலையாவது, கழிந்தோர் செய்த கழிவழீஇய ஒழிந்தோர் புலம்புங் கையறவு.
தபுதார நிலையாவது, காதலியையிழந்தார் காதல் நிலையென்பது.
தாங்கிய நிலையாவது, காதலனை இழந்தோள் நிலை.
தலைமைப்பெயல் நிலையாவது, அவர் பெருஞ்சிறப்பிற் புதல்வரைப் பெறாத் தலைவருந் தலைப்பெயல் நிலை; அது அங்கவனோடு இறந்தோரைப் பற்றி வருவது.
மகிழ்ச்சியாவது, ஓருயிராவதறிக உளங்கலந்தாற்கு என்பது.
பெருமையாவது, கூற்றம் மறுத்தற்கரிது; செயற்பாலனவல்லே செய்ம்மின்' எனப் பெரியோராற் சொல்லப்பட்ட சொற்பெருமை.
தீப்பாய்தலாவது, கணவனொடு நனியழற் புகல்.
சுரத்திடைத் தன் தலையார் கணவனை இழத்தலாவது, சுரத்திடைக் கணவனையிழந்த தலைமகள் முதுமை.
தனியேயிரங்கலாவது, துணையிழந்த தலைமகன் தனியேயிருந்திரங்கல்.
கலையார் மனைவி என்பது, களத்தில் வீழ்ந்த தலைமகனைத் தலைமகள் காத்த பெருமை. இஃது செருக்களத்துப் பேதையைப் பற்றிப் புணர்தல்.
சூளுறவாவது,
"கருந்தடங்கண் மங்கையரை நோக்குற்ற கண்ணும்
பெருந்தடந் தோட்பிணித்த கையும்--பருந்தின்
வளைவாயிற் பெய்யேனேல் வந்திரந்தார் துன்பங்
களையாது மாற்றுகவென் கை."
என வரும். பிறவுமன்ன.
(17)
103. உழிஞையின் வகை
வேந்தன் சிறப்பு மதிலே றுதல்வென்றி வாட்சிறப்புக்
காந்தும் படைமிகை நாட்கோ ளொடுகாவ லேமுடிகோள்
ஏந்துந் தொகைநிலை கொற்றநீர்ப் போர்ச்செல்வ மூர்ச்செருவே
போந்த முதிர்வு குறுமையென் றாமுழி ஞைப்புணர்ப்பே.
(இ-ள்.) இவை உழிஞை விகற்பமாம் (எ-று.)