115

அருளின் றீந்தே னிறைந்துநனி நெகிழ்த்து
மலரினு மெல்லிய ரென்ப ரதனைக்
காமர் செவ்வி மாரன் மகளீர்
நெடுமா மழைக்கண் விலங்கிநிமிர்ந் தெடுத்த
வாளும் போழ்ந்தில வாயின்
யாதோ மற்றது மெல்லிய வாறே."

கொடையென்பது,

"பாசடைப் போதிப் பேரருள் வாமன்
வரையா ஈகை போல யாவிருங்
கொடைப்பட்டு வீரக் கொடைவலப் படுமின்
முன்னொ ருமுறைத் தன்னுழை யிரந்த
அன்பிலர்க் காவேண் டளவும் பருக
என்புதொறுங் கழிப்பிற்றன் மெய்திறந்து வாக்கிக்
குருதிக் கொழும்பதங் கொடுத்தது மன்றிக்
கருசிமிட் பட்ட கள்ளப் புறவின்
மாய யாக்கை சொல்லிய தாற்றன்
உடம்பு நிறுத்துக் கொடுத்தது மன்றி"

என வரும்.

படையாளர் பக்கமாவது, கருதியறியும் படையாளர் பக்கம்.

ஒற்றுமையாவது, சிறியோர் நாணப் பெரியோர் கூறிய கூறுபாட்டிற் கழிமனத்தை ஒற்றுமை கொள்ளல்.

'மற்றும்' என்றமையால், எட்டியல் சான்றோர் பக்கமும் உட்படக் கண்டுகொள்க.

எட்டியலாவன,

"அழுக்கா றிலாமை யவாவின்மை தூய்மை
ஒழுக்கங் குடிப்பிறப்பு வாய்மை--யிழுக்காத
நற்புலமை யோடு நடுவு நிலைமையே
கற்புடைய வெட்டுறுப்புக் காண்."

என்றமையாலறிக.

சான்றோர் பக்கமாவது, பகைவர்கண்ணுந் தன்பாலார்கண்ணும் ஒப்புமையாகப் பாசறையுள்ளாச் சால்புடைமை கூறுதல்.

அஞ்சாச்சிறப்பு என்பதும் அது; பிறவுமன்ன.

(19)