உயிர்மெய்யாதல், உயிராதல், ஒற்றாதல் அழிந்து சந்தி காரியம் பண்ணப்படும் என்று சொல்லுவர் மேலாகிய புலவர் (எ - று.)
'தூமொழியே !' என்பது மகடூஉ முன்னிலை.
(13)
14. ணகர மெய்யின் முன் தகர நகரம் புணர்தலும், குற்றொற்றின் பின் உயிர் புணர்தலும்,
ய ர ழ ஒற்றின் முன் வல்லினம் புணர்தலும்
ஆறா முடலின்பின் தவ்வரின் ஆங்கதைந் தாமுடலாம்;
கூறார்ந்த நவ்வரின் முன்பின தாம்;குறிற் பின்புமெய்கள்
ஏறா வுயிர்பின் வரவிரண் டாகும்;யவ் வோடுரழ
ஈறா வரில்வன்மை பின்பில்வர்க் கத்தொற் றிடைப்படுமே.
(இ-ள்.) ஆறாம் உடலின் பின் தவரின் ஆங்கது ஐந்தாம் உடலாம்.-1ணகரவொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் தகாரம் வந்து புணர்ந்தால், வந்த தகாரமானது டகாரமாம்; கூறார்ந்த நவரின் முன்பினதாம் - ணகர வொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் நகாரம் வந்து புணர்ந்தால் வந்த நகாரமும் ணகாரமாம்; 2குறில் பின்பு மெய்கள் ஏறா உயிர் பின் வர இரண்டாகும் - குற்றெழுத்தின் பின்னின்ற ஒற்றுக்களானவை வருமொழி உயிர் முதலாகிய மொழி வந்து புணர்ந்தால், இடையே அவ்வொற்று இரட்டித்து நிற்கும்; யவ்வோடு ரழ ஈறா வரில் வன்மை பின்பில் வர்க்கத்து ஒற்று இடைப்படுமே - 3யகார ரகார ழகார ஒற்று ஈற்று நிலை
1. மண் + தீது = மண்டீது.
மண் + நன்று = மண்ணன்று.
2. கல் + எறிந்தான் = கல்லெறிந்தான்.
பொன் + அழகிது = பொன்னழகிது.
3. நாய் + கால் = நாய்க்கால் வல்லொற்று மிக்கன.
தேர் + தலை = தேர்த்தலை வல்லொற்று மிக்கன.
பூழ் + செவி = பூழ்ச்செவி வல்லொற்று மிக்கன.
ஈண்டு 'வருக்க ஒற்று' என்றது, வல்லினத்துக்கு இனமாகிய மெல்லொற்றை.
ஈர் + கோதை = ஈர்ங்கோதை -- மெல்லொற்று மிக்கது.
வேய் + குழல் = வேய்க்குழல் உறழ்ச்சி.
வேய்ங்குழல் உறழ்ச்சி.
ஆர் + கோடு = ஆர்க்கோடு உறழ்ச்சி.
ஆர்ங்கோடு உறழ்ச்சி.