122

"வெட்சி முதலாகத் தும்பை யீறாகப்
புக்கமர் செய்வது புறத்திணை யாகும்."

"அவைதாம்,
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்குவரு சிறப்பி னுழிஞை நொச்சி
விறன்மிகு சிறப்பிற் றும்பையுள் ளிட்ட
மறனுடை மரபின வேழென மொழிப."

"வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்வது வஞ்சியா-முட்கா
தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்த னொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை-அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கார்
செருவென் றதுவாகை யாம்."

"கைக்கிளை யேனைப் பெருந்திணை யென்றிவை
அக்கர மறிவோ ரகப்புற மென்ப."

"காட்சி முதலாகக் கலவியி னொருதலை
வேட்கையிற் புலம்புதல் கைக்கிளை; அதுதான்
கேட்போ ரில்லாக் கிளவிகள் பெறுமே."

"இறந்த மூப்பு மெய்தா இளமையுஞ்
சிறந்த காமத்திற் செய்யுஞ் சிதைவும்
பிறங்குதரு மரபிற் பெருந்திணை யாகும்."

"காந்தள் வள்ளி சுரநடை முதுபாலை
தாபதந் தபுதாரங் குற்றிசை குறுங்கலி
பாசறை முல்லை யில்லாண் முல்லை
என்றிவை பத்து மகப்புற மென்ப."

"ஆய்ந்த வகப்புற மையிரண்டு மாயுங்காற்
காந்தள் கலிமடமா வேறுத லுள்ளிட்ட
பத்து மகத்தின் புறம்."

"வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப்
போகிய மூன்றும் புறப்புறப் பொருளே."

(21)

பொருட் படலம் முற்றும்.

பொருளதிகாரம் முற்றும்.