'விண்ணவர் நாயகன் வேண்டக்
கண்ணினி தளித்த காதல்
புண்ணிய னிருந்த போதி
நண்ணிட நோய்நலி யாவே.'
இது முச்சீர்ச் சிந்தடி நான்காய் வந்த செய்யுள்.
'இன்ப மென்னை யலாததி லாதிவன்
பின்பு தோறும் பிரிவெனுந் தீயினால்
என்பு வேவ விறந்து படுங்கொலோ
அன்பு தாங்கரி தாதலி னாலரோ.'
இஃது அளவடி நான்காய் வந்த செய்யுள்.
1'முன்றான் பெருமைக்க ணின்றான் முடிவெய்து காறு
நன்றே நினைந்தான் குணமொழிந் தான்த னக்கென்
றொன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதி சூழ்ந்தான்
அன்றே யிறைவ னவன்றாள் சரணங்க ளன்றே.'
இது நெடிலடியான் வந்த செய்யுள்.
'இரவிடை மதிய மென்பா னாடிப்போய் மறையு மெல்லை
விரியிரு ளெழினி நீக்கி விசும்பெனு மரங்கு தன்மேல்
கரைகடன் முழவ மார்ப்பக் கதிரெனுங் கைகள் வட்டித்
தெரிகதி ரென்னுங் கூத்த னாடுவா னெழுந்து போந்தான்.'
இஃது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
'தகைமை தெரிசீர்க் கழிநெடில்' என்று சிறப்பித்த அதனால், அறுசீர்க்கு மேற்பட்டுப் பதினொரு சீரளவுங் கழிநெடிலடி வரப்பெறுமெனக் கொள்க.
வரலாறு:-
'தோடாரி லங்கு மலர்கோதி வண்டு வரிபாடு நீடு துணர்சேர்
வாடாத போதி நெறிநீழன் மேய வரதன் பயந்த வறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மை குணனாக நாளு முயல்வார்
வீடாத வின்ப நெறிசேர்வர் துன்ப வினைசேர்தல் நாளு மிலரே.'
இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
'எண்டிசையு மாகி யிருளகல நூறி
எழுதளிர்கள் சோதி முழுதுலக நாறி
வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து
மழையருவி போதி யுழைநிழல்கொள் வாமன்
1. குண்டல கேசி, கடவுள் வாழ்த்து.