வெண்டிரையின் மீது விரிகதிர்க ணாண |
வெறிகழல்கொண் மேனி யறிவனெழின் மேவு |
புண்டரிக பாத நமசரண மாகும் |
எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார். |
இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
1'கூரார் வளையுகிர் வாளெயிற்றுச் செங்கட் |
கொலையுழுவை காய்பசியாற் கூர்ந்தவென்னோய் நீங்க |
ஓரா யிரங்கதிர்போல் வாள்விரிந்த மேனி |
யுளம்விரும்பிச் சென்றாங்கி யைந்தனைநீ யென்றாற் |
காரார் திரைமுளைத்த செம்பவள மேவுங் |
கடிமுகிழ் தண்சினைய காமருபூம் போதி |
ஏரார் முனிவரர் வானவர்தங் கோவே |
யெந்தாய ரோநின்னை யேத்தாதார் யாரே.' |
இஃது ஒன்பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
'பைங்கண்வா ளெயிற்றினப் பகட்டெருத்தின் வள்ளுகிர்ப் |
பரூஉத்திரட் குருஉக்கொடாஅட் பாலுடைச் செனாவுடைச் |
சிங்கவேறு நான்குதாங்க மீதுயர்ந்த சேயொளிச் |
சித்திரங் குயிற்றினாளி செம்பொனாச னத்தின்மேற் |
1. "இதுவும் பின் வரும் உதாரணச் செய்யுள் இரண்டும் உரையிற் பிரித்திருக்குமாறு எண்சீர்க் கழிநெடிலடி விருத்தமென்றே கொள்ளல் வேண்டும். இவற்றை ஒன்பதின் சீர்க்கும், பதின் சீர்க்கும், பதினொரு சீர்க்கும் எடுத்துக்காட்டாக ஆசிரியர் கூறியது எவ்வாறு ஓசையூட்டினும் பொருந்திலது. பதின்சீர் எனவும், பதினொருசீர் எனவும் அவர் காட்டிய செய்யுட்கள் ஒரே சந்தம் உடையனவாம். அவற்றை,
'பைங்கண் வாளெ யிற்றி னப்ப கட்டெ ருத்தின் வள்ளுகிர்ப் |
பரூஉத்தி ரட்கு ரூஉக்கொ டாஅட் பாலு டைச்செ னாவுடை' |
எனப் பதினான்கு சீராகவும்,
'வீடு கொண்ட நல்லறம் பகர்ந்த மன்ப தைக்கெலாம் |
விளங்கு திங்க ணீர்மையால் விரிந்தி லங்கும் வன்பினோன்' |
எனப் பன்னிரு சீராகவுங் கொள்வாருமுளர். ஒன்பதின்சீர் முதலியவற்றிற்கு உதாரணம் வந்துழி வந்துழிக் காண்க. இவை காவியங்களில் அருமையாக வரும்," என்பது பழைய குறிப்பு.