மொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் வல்லினம் வந்து புணர்ந்தால், இடையே 1அவ்வவ்வந்த வல்லொற்றும் வல்லின வருக்கவொற்றும் மிக்கு முடியும் (எ-று.)
(14)
15. இ, ஈ, ஐ என்பவற்றுடன் நகரம் புணர்தலும், ழகர ளகர மெய்களுடன் தகரம் புணர்தலும்
நான்கொடு மூன்றொன்ப தாமுயி ரின்பின்பு நவ்வருமேல்
ஏன்ற ஞகாரம தாகும்; பதினைந்தொ(டு) எண்ணிரண்டாய்த்
தோன்றுடற் பின்னர்த் தகாரம் வரினிரண் டுந்தொடர்பால்
ஆன்றவைந் தாமுடல் ஆம்;முன்பி லொற்றுக் கழிவுமுண்டே.
(இ-ள்.) நான்கொடு மூன்று ஒன்பதாம் உயிரின் பின்பு நவருமேல் என்ற ஞகாரமதாகும் . 2இகர ஈகார ஐகார உயிரீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் நகாரம் வந்து புணர்ந்தால், வந்த நகாரமானது ஞகாரமாம்; 3பதினைந்தொடு எண்ணிரண்டாய் தோன்று உடல் பின்னர் தகாரம் வரின் இரண்டும் தொடர்பால் ஆன்ற ஐந்தாம் உடலாம் - ழகார ளகார ஒற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் தகாரம் வந்து புணர்ந்தால், நிலைமொழியீறும் வருமொழி முதலும் திரிந்து தனித்தனி இரண்டும் டகாரமாம்; 4முன்பில் ஒற்றுக்கு
1. 'வல்லொற்றும் வல்லின வருக்கஒற்றும் மிக்கு முடியும்' என்பதற்கு, வல்லொற்று மிக்கு முடியும், மெல்லொற்று மிக்கு முடியும், வல்லொற்றும் மெல்லொற்றும் உறழ்ந்து மிக்கு முடியும் என்று பொருள் கொள்க.
2. கவி + நன்று = கவி ஞன்று.
தீ + நன்று = தீ ஞன்று.
பனை+நன்று = பனை ஞன்று.
(இம்மூன்று உதாரணங்களும் வேறு பிரதியிலுள்ளவை)
'செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே !'
(அப்பர் தேவாரம் - கோயில் திருவிருத்தம் - 5ஆம் பாடல்)
3. | பாழ் + தீமை = பாட்டீமை | } | நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் டகரமாகத் திரிந்தன |
நாள் + தீமை = நாட்டீமை |
4. | பாழ் + தீமை = பாடீமை | } | நிலைமொழி ஈறு கெட்டது. |
நாள் + தீமை = நாடீமை |
(பாட்டீமை முதலிய நான்கும் வேறு பிரதியில் உள்ள உதாரணம்)