135

இது நேரிசை வெண்பாவே போன்று அதனின் நீண்டு வந்தமையாற் கலி வெண்பா எனக்கொள்க.

'ஒன்றும் பலவும் விகற்பாகி நான்கடியாய்
நின்ற தனிச்சொற்றாம் பெற்றும் பெறாதொழிந்துந்
தன்னிசைய நேரிசையில் வேறாய் வருமாகில்
இன்னிசைவெண் பாவாமென் றார்.'

இதனை இன்னிசை வெண்பாவிற்கு இலக்கணமும் இலக்கியமுமாய்க் கண்டுகொள்க.

1'ஒண்கதிர் வாண்மதியஞ் சேர்தலா லோங்கிய
அங்கண் விசும்பின் முயலுந் தொழப்படூஉங்
குன்றிய நீர்மைய ராயினுஞ் சீர்பெறுவர்
குன்றன்னார் கேண்மை கொளின்.'

இது தனிச்சொலின்றி ஒரு விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.

2'உறுபுனல் தந்துல கூட்டி--யறுமிடத்துங்
கல்லூற் றுழியூறு மாறேபோற்--செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணுஞ்--சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை.

இஃது ஈற்றடி ஒழிந்து ஏனையடிகள் தனிச்சொற்பெற்று வந்தது. பிறவுமன்ன.

இனி வெண்பாவை ஓசை யூட்டுமாறு:-

3'அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.'

இதனை,

புளிமா புளிமா புளிமாங்காய் தேமா
புளிமா புளிமா பிறப்பு.

என்று ஓசையூட்டுக.

4'நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்.'
இதனை,


1. நாலடியார், 176.

2. நாலடியார், 185.

3. திருக்குறள், 1.

4. திருக்குறள், 1072.