147

எனவாங்கு,

ஆனொடு புல்லிப் பெரும்புதர் முனையும்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.'

இது தனிச் சொற்பெற்றுச் சுரிதகத்தாலிற்ற தரவு கொச்சகக் கலிப்பா.

1'திருந்திலைய விலங்குவேற் றிகழ்தண்டார்க் கதக்கண்ணன்
விரிந்திலங்கு மவிர்பைம்பூண் தடமார்பன் வியன்களத்து
முருந்திறைஞ்சு முத்திற்கு முட்டியெல்லாந் தனித்தனியே
அருந்திறன்மா மறமன்னர்க் கழுவனவும் போன்றனவே.'

2'அடலழுங் கழற்செவ்வே லலங்குதார்ச் செம்பியன்றன்
கெடலருங் கிளர்வேங்கை யெழுதத்த முயிரோம்பா
துடல்சமத்துக் குத்தெரிந்த வொன்னாப்பல் லரசர்தங்
கடகஞ்சேர் திரண்முன்கை யிற்றோட வைகினவே.'

இவையும் முன்னதனோடொக்கும். இவையிற்றைக் கலிவிருத்தம் என்றாலும் இழுக்காது.

3'வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாங்
கொடிபடு வரைமாடக் கூடலார் கோமானே;

துனைவளைத்தோ ளிவண்மெலியத் தொன்னலந் தொடர்புண்டாங்
கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற்கோர் மாறென்று
புனைமலர்த் தடங்கண்ணார் பொருளாகக் கருதாரோ;

அதனால்;

செவ்வாய்ப் பேதை யிவடிறத்
தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே.'

இது சுரிதகத்தாலிற்ற தரவிணைக் கொச்சகக் கலிப்பா.

4'பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக்
குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப்
படைப்பரிமான் தேரினொடும் பரந்துலவு மறுகினிடைக்
கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே;


1. யாப்ப. வி. 32-ஆம் சூ. மேற்கோள்.

2. யாப்ப. வி. 115-ஆம் சூ. மேற்கோள்.

3. யாப்ப. வி. 86-ஆம் சூ. மேற்கோள்.

4. யாப்ப. வி. 86-ஆம் சூ. மேற்கோள்.