தரவு.
ஆங்கொருசார்,
உச்சியார்க் கிறைவனா யுலகெலாங் காத்தளிக்கும்
பச்சையார் மணிப்பைம்பூண் புரந்தரனாய்ப் பாவித்தார்
வச்சிரங் காணாத காரணத்தான் மயங்கினரே.
ஆங்கொருசார்,
அக்கால மணிநிரைகாத் தருவரையாற் பனிதவிர்த்து
வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்
சக்கரங்கைக் காணாத காரணத்தாற் சமழ்த்தனரே;
ஆங்கொருசார்,
மால்கொண்ட பகைதணிப்பான் மாதடிந்து மயங்காச்செங்
கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார்
வேல்கொண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே;
இது தாழிசை.
அஃதான்று,
கொடித்தே ரண்ணல் கொற்கைக் கோமான்
நின்ற புகழொருவன் செம்பூட் சேஎய்
என்றுநனி யறிந்தனர் பலரே தானும்
ஐவரு ளொருவனென் றறிய லாகா
மைவரை யானை மடங்கா வென்றி
மன்னவன் வாழியென் றேத்தத்
தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே.'
இது சுரிதகம்.
இது நான்கடித் தரவும் மூவடித் தாழிசை மூன்றும் இடையிடை தனிச்சொல்லும் பெற்று நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் சிறிது வேறுபட்டு வந்தமையால், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.
1'தண்மதியொண் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்
குண்மதியு முடனிறைவு முடன்றளர முன்னாட்கட்
கண்மதியொப் பிவையின்றிக் காரிகையை நிறைகவர்ந்து
பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ;
இது தரவு.
1. யாப்ப. வி. 86-ஆம் சூ. மேற்கோள்.