149

இளநல மிவள்வாட விரும்பொருட்குப் பிரிவாயேல்
தளநல முகைவெண்பல் தாழ்குழல் தளர்வாளோ;

தகைநல மிவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல்
வகைநல மிவள்வாடி வருந்தியில் லிருப்பாளோ;

அணிநல மிவள்வாட வரும்பொருட்குப் பிரிவாயேல்
மணிநல மகிழ்மேனி மாசொடு மடிவாளோ;

நாம்பிரியே மினியென்று நறுநுதலைப் பிரிவாயேல்
ஓம்பிரியே மென்றளித்த வுயர்மொழியும் பழுதாமோ;

குன்றளித்த திரடோளாய் கொய்புனத்துக் கூடியநாள்
அன்றளித்த வருண்மொழியா லருளுவதும் பழுதாமோ;

சில்பகலு மூடியக்காற் சிலம்பொலிச்சீ றடிபரவிப்
பல்பகலுந் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ;

இவையாறுந் தாழிசை.

அஃதான்று,

தனிச்சொல்.

அரும்பெற லமிழ்தினுந் தரும்பொரு ளதனினும்
பெரும்பெற லரிதிவள் வெறுக்கையு மற்றே;

அதனால்,

விழுமிய தறிமதி யறிவாங்
கெழுமிய காதலிற் றரும்பொருள் சிறிதே.'

இது நான்கடிச் சுரிதகமும் நான்கடித் தரவும் இரண்டடித் தாழிசையாறும் தனிச்சொல்லும் நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.

1'மணிகிளர் நெடுமுடி மாயவனுந் தம்முனும்போன்
றணிகிளர் நெடுங்கடலுங் கானலுந் தோன்றுமால்
நுரைநிரந் தவையன்ன நொய்ப்பறைய சிறையன்னம்
இரைநயந் திறைகூரு மேமஞ்சார் துறைவகேள்;

வரையென மழையென மஞ்செனத் திரள்பொங்கிக்
கரையெனக் கடலெனக் கடிதுவந் திசைப்பினும்
விழுமியோர் வெகுளிபோல் வேலாழி யிறக்கலா
தெழுமுந்நீர் பரந்தோடு மேமஞ்சார் துறைவகேள்;

இவையிரண்டுந் தரவு.


1. யாப்ப. வி. 86-ஆம் சூ. மேற்கோள்.