பின்னா மிகார மதுபன்னொன் றாமுடல் பின்வருமேல்;
சொன்னா ரியவின்பின் றோன்று நகார ஞகாரமென்றே.
(இ-ள்.) பன்மூன்றதாம் உடல் நபின் வருமெனின் ஈற்றெழுத்தாம் -1லகாரவொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் நகாரம் வந்து புணர்ந்தால், அந்த லகாரமானது னகாரமாம்; பன்னேழதாம் வன்மை பின்வரின் - 2வருமொழி முதல் வல்லினம் வந்து புணர்ந்தால் அந்த லகாரமானது றகாரமாம்; ஆயிடை தவ்வுமஃதாம் - 3புணர்ந்த வல்லினம் தகாரமாயின் வந்த தகாரமும் றகாரமேயாம்; பின்னாம் இகாரமது பன்னொன்றாம் உடல் பின் வருமேல் - 4லகார வொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் யகாரம் வந்து புணர்ந்தால், இடையே ஓர் இகரம் வரப்பெறும்; சொன்னார் இயவின் பின் தோன்றும் நகாரம் ஞகாரமென்றே - 5யகாரவொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் நகாரம் வந்து புணர்ந்தால், வந்த நகாரமானது ஞகாரமாம் என்று சொல்லுவர் புலவர் (எ-று.)
(17)
18. ழகரமெய் வல்லினத்தோடும் நகரத்தோடும் மகரத்தோடும்
புணர்தலும், இயல்பு சந்தியும்
ஐம்மூன்ற தாமுடல் வன்மைபின் வந்திடில் ஆறொடைந்தாம்
மெய்ம்மாண்ப தாம்;நவ் வரின்முன் னழிந்துபின் மிக்கணவ்வாம்;
மம்மேல் வரினிரு மூன்றா முடல்;மற் றியல்புசந்தி
தம்மா சகலங் கிடப்பின்க ளாமென்ப தாழ்குழலே!
(இ-ள்.) ஐம்மூன்றதாம் உடல் வன்மை பின் வந்திடில் ஆறொடு ஐந்தாம் மெய் மாண்பதாம் - 6ழகாரவொற்றீற்று நிலைமொழிப்
1. கல் + நன்று = கன்னன்று.
கல் + நன்மை = கன்னன்மை
2. கல் + குறை = கற்குறை
3. கல் + தீது = கற்றீது.
கல் + தீமை = கற்றீமை.
4. வேல் + யாது = வேலியாது (வேறு பிரதியில் உள்ள உதாரணம்)
5. | செய் + நின்ற = செய்ஞ்ஞின்ற | } | முன்காட்டிய அப்பர் தேவாரம் |
நெய் + நின்ற = நெய்ஞ்ஞின்ற |
6. பாழ் + செய் = பாண்செய் (வேறு பிரதியிலுள்ள உதாரணம்)
தமிழ் + சொல் = தமிட்சொல் (இந்நூல் செ. 7.)