பின்பு தனிச்சொற் பெற்று அதன் பின் ஒரு சுரிதகம் பெற்று முடியும் எனக்கொள்க. 'சீர் தனிச்சொல்' என்று சிறப்பித்த அதனால், வெள்ளைச் சுரிதகத்தால் இறாது எனக் கொள்க. வெண்பா முதலாக ஆசிரியத்தால் இறுவது மருட்பா(எ-று.)
அதனைப் புறநிலை வாழ்த்து மருட்பா என்றும், கைக்கிளை மருட்பா என்றும், வாயுறை வாழ்த்து மருட்பா என்றும், செவிஅறிவுறூஉ மருட்பா என்றும் வேறுபடுப்பாரும் உளரெனக் கொள்க.
வரலாறு:-
'மிக்ககூன் விதிமுறை வகுத்தலுந்
தக்காசிடை வகையுளி சேர்த்தலும்
அளபெடை யலகு நீத்தலும்
வளமலி யசைச்சீர் வகுத்தலும்
வெண்பா வல்லாப் பாவினுட்
பண்பார் நெடிலடி நடத்தலும்
குறளடி யால்வரும் வஞ்சியைத்
திறமலி சிந்தடி யாக்கலு
மிக்குங் குறைந்தும் வரினும்
ஒருபுடை யொப்புமை நோக்கி
ஒழிந்த செய்யுளுங் கொளலே
அதான்று,
குறியீடு மிலக்கண முண்மையிற்
செறிவு டைப்பொதுச் சீர்தரப் பெறாவே.'
இது முச்சீரடி வஞ்சிப் பாட்டு.
1'பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்திரிதரும்
வளவயலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மணமுரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
நாளும்,
மகிழ மகிழ்தூங் கூரன்
புகழ்த லானாப் பெருவண் மையனே.'
இஃது இருசீர் வஞ்சிப் பாட்டு.
1. யாப்ப. வி. 15-ஆம் சூ. மேற்கோள்.