154

1 'காமர் கடும்புனல்' என்னுங் கலியினுள்,
'சிறுகுடி யீரே சிடிகுடி யீரே'

என ஓரடியாலே தனிச்சொல் வந்தவாறு.

2'உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும்
பிற்கொடுத்தார் முற்கொளவும்
உறுதிவழி யொழுகுமென்ப
    அதனால்,
நற்றிற நாடுத னன்மை
பற்றிய யாவையும் பரிவறத் துறந்தே.'

இவ்வஞ்சிப்பா அடி முதற்கண் 'உலகே' எனத் தனிச்சொல் வந்தவாறு.

3'மாவழங்கலின் மயங்குற்றன, வழி'

என வஞ்சி அடியின் இறுதிக்கண் 'வழி' என அசை கூனாய் வந்தவாறு.

4'கலங்கழா அலிற் றுறை கலக்குற்றன'

என்னும் வஞ்சியடியின் நடு 'துறை' என அசை கூனாய் வந்தவாறு.

5'தேரோடத் துகள்கெழுமின, தெருவு'

என்னும் வஞ்சி அடியின் இறுதிக்கண் தெருவு என்ற 6உகர இறுதியாகிய இயற்சீர் கூனாய் வந்தவாறு.

'தக்காசிடை வகையுளி சேர்த்தலும்'

என்பதனால், அயற்சீர் தளைகளை நோக்கி ஓசையூட்டுக. வகையுளியாவது, முன்னும் பின்னும் அசை முதலாகிய உறுப்புகள் நிற்புழி அறிந்து குற்றப்படாமல் வண்ணம் அறுப்பது. என்னை?

7'அருணோக்கு நீரா ரசைசீ ரடிக்கண்
பொருணோக்கா தோசையே நோக்கி - மருணீங்கக்


1. கலி. 39.

2. யாப்ப - வி. 94-ஆம் சூ. மேற்கோள்.

3. புறம். 345.

4. புறம். 345.

5. புறம். 345.

6. இச்சொல் முற்பதிப்பில் இல்லை.

7. யாப்ப - வி. 95-ஆம் சூ. மேற்கோள்.