159

இது நேரிசை வெண்பாச் சிதைந்து வந்த வெண்டுறை.

'இலைசூழ் செங்காந்த ளெரிவாய்  முகையவிழ்த்த வீர்ந்தண் வாடை
கொலைவே னெடுங்கட் கொடிச்சி கதுப்புளறுங் குன்றநாட
வுடைஉலை நோயொ டுழக்குமா லந்தோ
முலையிடை நேர்பவர் நேருமிடமே.

1'குழலிசைய வண்டினங்கள் கோளிலைய செங்காந்தட் குலைமேற் பாய
அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி
கலுழ்வனபோல் நெஞ்சகைந்து கல்லருவி தூஉம்.
நிழல்வரை நன்னாட னீப்பனோ வல்லன்.

இவை நான்கடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்த ஓரொலி வெண்டுறை.

2'ஓதநெடுங் கடல்வலையத் துயிரனைத்து முயக்கொள்வா னுயர்ந்த கொள்கைப்
போதிநிழ லமர்ந்தருளும் புண்ணியனற் றண்ணளியும் பிறிதாம் போலும்
சூதவனங் குயில்கோதச் சுரும்புபரந் திசைபாட
மாதவியுங் கொடிநுடங்க மாருதமு மூடுலவுந்
தாதுபொழிந் தனகுரவுந் தண்ணிளவே னிலும்புகுந்த
ஏதிலரா கியவன்ப ரின்னருளு மிதுவாயின்.

இஃது ஆறடியாய் ஈற்றடி நான்குங் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.'

3'தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னா மென்னாம்
யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோற் சாய்த்துவிடும் பிலிற்றி யாங்கே.

இது மூன்றடியான் வந்த ஓரொலி வெண்டுறை.

4'வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
உறவுற வரும்வழி யுரைப்பன வுரைப்பன்மற்
செறிவுறு தகையினர் சிறந்தன ரிவர்நமக்
கறிவுறு தொழிலரென் றல்லன சொல்லன்மின்
பிறபிற நிகழ்வன பின்.


1. யாப்ப - வி. 15-ஆம் சூ. மேற்கோள்.
2. யாப்ப - வி. 67-ஆம் சூ. மேற்கோள்.
3. யாப்ப - வி. 67-ஆம் சூ. மேற்கோள்.
4. யாப்ப - வி. 67-ஆம் சூ. மேற்கோள்.