16

பதத்தின் பின்னர் வருமொழி முதல் வல்லினம் வந்து புணர்ந்தால், அந்த ழகாரமானது ணகாரமும் டகாரமுமாம்; நவரின் முன்னழிந்து பின் மிக்க ணவ்வாம் -1வருமொழி முதல் நகாரம் வந்து புணர்ந்தால், அந்த ழகாரமானது கெட்டு வந்த நகாரம் ணகாரமாம்; மமேல் வரின் இரு மூன்றாம் உடல் - 2வருமொழிமுதல் மகாரம் வந்து புணர்ந்தால், அந்த ழகாரமானது ணகாரமாம்; 3மற்றியல்பு சந்தி தம் மாசகலங்கிடப்பின்களாம் என்ப - இயல்பு சந்தியாவன தத்தங்கிடப்பிலே கிடக்கும் என்று சொல்லுவர் மேலாகிய புலவர் (எ-று.)

'தாழ்குழலே!' என்பது மகடூஉ முன்னிலை.

(18)

19. மகரமெய் வல்லின மெல்லினங்களோடு புணர்தலும்,
அது வகரம் வரக் குறுகுதலும், வகரமெய் தகரத்தோடு புணர்தலும்

வன்மைவந் தாற்பின்பு பத்தா முடல்வன்மை யின்வருக்கத்
தன்மையொற் றாகும்: ஞநமக்கள் பின்வரிற் சாற்றுமப்போம்;
முன்வயிற் கால்வவ் வரின்;பதின் மூன்றா முடலழியும்
பின்வயின் தவ்வரின் தவ்வுங் கடைவன்மைப் பேறுறுமே.

(இ-ள்.) வன்மை வந்தால் பின்பு பத்தாம் உடல் வன்மையின் வருக்கத் தன்மையொற்றாகும் - 4மகரவொற்றீற்று நிலைமொழிப்


1. பாழ் + நன்று = பாணன்று.

2. பாழ் + மேலது = பாண்மேலது.
(இவை வேறு பிரதியில் உள்ள உதாரணம்)
முகிழ் + முலை = முகிண்முலை.

3. பொன் + மலை = பொன்மலை.
புகழ் + அழகிது = புகழழகிது.

4. மரம் + குரங்கு = மரக்குரங்கு.
மரம் + செப்பு = மரச்செப்பு.
மரம் + தறி = மரத்தறி.
மரம் + பாவை = மரப்பாவை.
மரம் + குறிது = மரங்குறிது.
மரம் + சிறிது = மரஞ்சிறிது.
மரம் + தண்ணிது = மரந்தண்ணிது.
(இவை வேறு பிரதியில் உள்ள உதாரணங்கள்.)
குளம் + கரை = குளக்கரை, குளங்கரை
என வரும் உறழ்ச்சி முடிபுங் கொள்க.