வரலாறு:-
'வார மலிபுன்னை மலிசினை மேலிருந்து
நாரை நரலு நயமில் சிறுமாலை
ஓர வருங்கொலிவ் வூரே யன்னாய் !
பொன்னுதிர் புன்னை பொழிசினை மேலிருந்
தன்னந் திளைக்கு மருளில் சிறுமாலை
இன்னும் வருங்கொலிவ் வூரே யன்னாய் !
மன்றணி புன்னை மறிமடல் மேலிருந்
தன்றில் திளைக்கு மருளில் சிறுமாலை
இன்று வருங்கொலிவ் வூரே யன்னாய்'!
இவை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை.
'போதி மேவினை புன்மை யகற்றினை
சோதி வானவர் தொழவெழுந் தருளினை
ஆதி நாதநி னடியிணை பரவுதும்.'
இது தனியே வந்தது.
1'இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா
அரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனில்
அரங்க மணிபொழிலா வாடு மாயின்
மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்.'
இஃது இடைகுறைந்து இடை மடக்காய் வந்த ஆசிரியத்துறை.
2'கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருவீராயின்
அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி யகன்றுபோக
நரையுரு மேறுநுங்கை வேலஞ்சு நும்மை
வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வாரலையே.'
இஃது ஈற்றயலடி குறைந்து வந்த ஆசிரியத்துறை.
'கோவித்த மன்னர் குலங்க ணலங்கெட
வேவித்த கைச்சிலை தொட்ட
மாவித் தகனே மணிமுடி யாயெனைக்
கூவித்த காரணங் கூறே.'
இஃது இடையிடை குறைந்து வந்த ஆசிரியத்துறை.
1. யாப்ப - வி. சூ. 76-மேற்கோள்.
2. யாப்ப - வி. சூ. 76-மேற்கோள்.