162

'மேரு நெடுவரை மீது பொருபுலி
சேர எழுதிய சோழன்
ஆர மலரணி யாளி யனுபமன்
வீர னடுகணை யானே.

இஃது அளவடியும் சிந்தடியும் உறழ்ந்து வந்த ஆசிரியத்துறை.

'பாடகஞ்சேர் காலொருபாற் பைம்பொற் கழலொருபால் தேன்துளி
நீடு குழலொருபால் நீண்ட சடையொருபால்
வீடியமா னதளொருபால் மேகலைசேர்ந்
தாடு துகிலொருபா லவ்வுருவாண் பெண்ணென் றறிவார் யாரே.

இஃது இடையிடை குறைந்து வந்தது.

'வரிகொ ளரவு மதியும்
புரிவுள சடையும்
புரிவுள சடைமேற் புனலும் பிறழுமே.

இதுவும் அவ்வாறே குறைந்து இடையடி மடக்கி வந்தது.

'விண்ட முல்லை தாதுதிர்ந்த மீதெலாங்
கொண்டல்பூச் சொரிந்திருண்ட கொன்றைபொன் பொழிந்தவால்
கெண்டையின் தடங்கண் மாதர் கேள்வர் சொன்ன காலமால்
வண்டு பாட மஞ்ஞை யாட வந்ததே.'

எனவும்,

'மிக்கவுத்த ராபதிக்கு மேவினார்
தொக்கசெஞ் சடைப்பரன் தனக்கோர்தூ சளித்தவாய்
மைக்கொள் சோலை சூழநீதி மன்னர் கூடி வாரணம்
புக்க வாசவர்க் கிருக்கை நல்கினார்.

எனவும், இவை இரண்டும் இடையடி நீண்டு வந்தன. பிறவுமன்ன.

'நுங்களையே யுறவாக வனம்புகுந்தான் காதலிகா ணுமக்குந் தாயே
னெங்களையே சரணாக விருநீரல் லாலிங்கொ ருற்றா ரில்லை
தங்களையா னிப்பொழுதே சாரேனே லென்மக்கள் தரியார் கண்டீர்
பொங்குளைமான் தேரிரவி போவதன்முன் யானணையப் போவன் வாழி.

இது கழிநெடில் நான்கு ஒத்து வந்தமையால் ஆசிரிய விருத்தம். இனி ஒரு சாரார் ஆசிரிய விருத்தத்தினை மண்டில விருத்தம் என்று கூறுவர்.