164

(இ - ள்.) ஈரடி முதலாக அனைத்தடியாலும் வந்து ஈற்றடி மிகுவது கலித்தாழிசையாம்; இவை ஒருபொருள்மேல் மூன்றடுக்கவும் பெறும். நாற்சீர் நான்காய் வருவது கலி விருத்தம்; நெடிலடி நான்காய் வருவது கலித்துறையாம்(எ-று.)
வரலாறு:

1'கொய்தினை காத்துங் குளவி யடுக்கத்தெம்
பொய்தற் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டின்;
ஆய்தினை காத்து மருவி யடுக்கத்தெம்
மாசில் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டின்;
மென்றினை காத்து மிகுபூங் கமழ்சோலைக்
0குன்றச் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டின்.

இவை ஈரடி மூன்றாய் ஈற்றடி மிக்கு ஒரு பொருள்மேல் வந்த கலித்தாழிசை.

2'பூண்ட பறையறையப் பூத மருள
நீண்ட சடையா னாடுமே
நீண்ட சடையா னாடு மென்ப
மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே.

இஃது ஈற்றடி மிக்கு ஏனையடியில் இரண்டாமடி குறைந்து, முதலடியும் மூன்றாமடியும் ஒத்து வந்த கலித்தாழிசை.

போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகண்மெய் பூசல்
கூர்த்தபனி யாற்றுக் குளித்தல் புலனன்றே
சார்த்தியிடு பிச்சையர் சடைத்தலையொ டாய்தல்
வார்த்தையிவை செய்தவ மடித்தமன மென்றான்.

இது நாற்சீர் நாலடியான் வந்த கலிவிருத்தம். அடிதோறும் பொருள்பெற்று வந்தன. மண்டில விருத்தம். ஏனைய நிலைவிருத்தம்.

3'முன்றான் பெருமைக்கண்.....சரணங்களன்றே.

இது நெடிலடி நான்காய் வந்த கலித்துறை.

'நன்மை மேவுவார் மேவுவார் பெரும்பொரு ணான்கும்
புன்மை மேவுவார் யாவரும் புகழொடு பொருந்தார்
தொன்மை மேவுவார் மேவுவார் தொடர்வறாச் சுற்றம்
இன்மை மேவுவார் யாவரு மின்பமொன் றெய்தார்.

இது மண்டிலக் கலித்துறை. பிறவும் அன்ன.


1. யாப்ப - வி. சூ. 87. மேற்கோள்.
2. யாப்ப - வி. சூ. 87. மேற்கோள்.
3. குண்டலகேசி, கடவுள் வாழ்த்து. இந்நூல், 125-ஆம் பக்கம்.