1'மடப்பிடியை மதவேழந்
தடக்கையான் வெயின்மறைக்கும்
இடைச்சுர மிறந்தார்க்கே
நடக்குமென் மனனேகாண்;
பேடையை யிரும்போத்துத்
தோகையான் வெயின்மறைக்குங்
காடக மிறந்தார்க்கே
ஓடுமென் மனனேகாண்;
இரும்பிடியை யிகல்வேழம்
பெருங்கையான் வெயின்மறைக்கும்
அருஞ்சுர மிறந்தார்க்கே
விரும்புமென் மனனேகாண்.
இது வஞ்சித்துறை, ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்தமையான், வஞ்சித் தாழிசையாம்.
'மன்ன னேரியன்
சென்னி மானதன்
கன்னி காவலன்
பொன்னி நாயகன்.
இது வஞ்சி மண்டிலத்துறை.
'தாதகி நிழலே தானிரவே
போதலர் பூகஞ் சூழ்பொழிலே
மீதெழு நிலவே வெவ்வெயிலே
ஆதர வகலா ளிங்கிவளே.
இது வஞ்சி மண்டிலவிருத்தம். இவ்வினமனைத்தினுங் குறளடியால் வருந்துறையும், தாழிசையும் குறளடி வஞ்சிப்பாவின் இனமென்றும்; சிந்தடியால் வரும் வஞ்சிவிருத்தம் சிந்தடி வஞ்சிப்பாவின் இனமென்றும் வழங்கப்படும் என்ப.
2'மிக்குங் குறைந்தும் வரினும் ஒருபுடை
ஒப்புமை நோக்கி ஒழிந்தவுங் கொளலே.
என்றார் அமுத சாகரனார்.
1. யாப்ப - வி. சூ. 91. மேற்கோள்.
2. யாப்ப - வி. சூ. 93.