அவ்வோசை வெண்பாவின் ஓசை அன்று; அது உதாரணத்தில் ஓசை என்று கொள்க. 'வெண்பாவின் ஓசையும் உண்டே?' எனில் இரண்டோசை ஓரிடத்து நில்லா என்க. வெண்பாவின் ஓசை அங்கிருப்பதாகில் வெண்பாத் தன்கண் ஓசை இன்றியிருக்கும். அப்பாலது வெண்பாவின்கண்ணும் கண்டோம். ஆதலால் உதாரணத்தால் ஓசையூட்டும் பொழுது உதாரணத்திலோசை என்று கொள்க. அன்றியும்,
1'கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.
'இதனை எப்படி ஓசை யூட்டுவது? எனில் குற்றியலிகரமென்று ஒன்றாக்கி அதனை,
2'சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉஅளபோ
டாரு மறிவ ரலகு பெறாமை
என்று இகரம் அலகு பெறாதாக்கி, ஓசையூட்டுக என்பர்; அதுவும் பிழையென்க. இகரங் குற்றெழுத்தாய் நின்று அலகு காரியும் பெறுதலல்லது ஒற்றெழுத்தே போல் அரைமாத்திரை உடைத்தாயினும், அலகு காரியம் பெறாது ஒழிதற்குக் காரணம் இன்மையால் என்க. அன்றியும் அலகு காரியம் பெறாவிடில், எல்லாவிடத்தும் பெறாதொழிய வேண்டும் என்க. அன்றியுங் குற்றியலிகரம் அரை மாத்திரையாய், முற்றியலிகரம் ஒரு மாத்திரையானமை ஓர் உச்சாரணையினால் வேறுபடுத்திக் காட்டவொண்ணாவென்க. அன்றியுஞ் சீருந் தளையும் அழிய வந்த இடத்து அலகு காரியம் பெறாதெனின், இச்செய்யுளைச் செய்த புராண கவிஞர் சீரும் தளையும் சிதையச் செய்தாராதலால், அலகிட்டவன் திருந்த அலகிட்டானாகையும் பொருந்தாதென்க. அலகிட்டவன் திருந்த அலகிட்டான் ஆகவும் அமையும, ஒரு நாள் அலகிட்டபடியே திருந்தக் கிடப்பதாகில் என மறுக்க.
3'குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழி
நிலாவணங்கு நீர்மணன்மே னின்று--புலாலுணங்கல்
கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மை யோநீபிறர்
உள்ளம்புக் காப்ப துரை.
என்னும் பழம்பாடல் எவ்விலக்கணங்களால் அலகிட்டு ஓசையூட்டும் பொழுதும் ஓசையுண்ணாது, செவி கருவியாகப் பார்த்த
1. திருக்குறள், 585.
2. யாப்ப - காரிகை, ஒழிபு, 1.
3. யாப்ப - வி. சூ. 2-மேற்கோள்.