169

பொழுது ஓசை உண்ணும்; ஆதலால், அவை எல்லாம் பிழைக்கும் என்க. ஓசையுண்ணாத பொழுது மற்றொரு பெயர் மாத்திரம் போக்கி அச்செய்யுளுக்கு வேறொரு குற்றஞ்சொல்ல மாட்டாமையால், பயனுமில்லை என்க அன்றியும், வடநூற் புவ்வர்க்கு ஒசையூட்டுக என்பதில்லை எனக் கொள்க . மேலும், அவர் பயில்வார்க்கரிதாக நூலைப் பெருக்குவதுவுஞ் செய்து, அப்பெருமையில் வாய்ப்புக்களை அடக்கமாட்டாதே மிக்குங் குறைந்தும் வரினும் ஒருபுடை ஒப்புமை நோக்கி ஒழிந்தவுங் கொளல் என்று சூத்திரமுஞ் செய்தமையாலே அடங்கவுஞ் செய்திற்றிலர். பயில்வார்க்கு எளிதாகச் சுருங்கவுஞ் செய்திற்றிலர். யாப்பதிகாரத்தினால் பயனும், செய்யுளுக்கு ஒரு பெரிய ஏதுவே ஆதலால், குற்றமென்க. அன்றியும், யானைத்தொழில் முதலாகிய செய்யுட்களையெல்லாம், அடி வகுத்தற்கு இலக்கணஞ் சொன்னார் அடி வகுத்தும் பயனின்மையாலும், அடி வகுத்தற்குக் கட்டளைப்பட்டு நிரம்பி இருப்பதோர் இலக்கணம் இன்மையாலும் அதுவும் பிழை என்க. அடி வகுத்தற்குக் கலித்துறை, நேரிசை வெண்பா முதலிய செய்யுட்களை எதுகைக் கருவியாகக் கொண்டு அடி வழங்குவதாகில் 'திருமன்னி வளரும் இருநில மடந்தையும், போர்ச்செய்ய பாவையும், சீர்த்தனிச் செல்வியும்' இன்னுஞ் சில செய்யுளும் ஆசிரியப்பா, வெண்பாவோடு மாறுகொண்டு போலி வெண்பாவாகும். அன்றியும்,

1'போரவுணர்க் கடந்தோய் நீ
புணர்மருதம் பிளந்தோய் நீ
நீரகல மளந்தோய் நீ
நிழறிகழைம் படையோய் நீ

என்னும் இடையெண்ணே செந்துறையாம் எனக் கொள்க. மற்றும் அடிவகுத்தற்கு நிரம்பி இருப்பதொரு கருவி கண்டதின்மையானும், ஆசிரியப்பா முதலாகிய அடி வகுத்துப் பயன் நிரம்பாமையானும் அது பிழை என்க. மற்று மிகைப்படக் கூறுதல், முதலாகப் பல குற்றமும் உள எனக் கொள்க. 'குடமுடைந்தது, மடம் வெந்தது,' என்றாற்போலச் சிறிதேயாயினும் குற்றமுடைத்தாயின் அது நூலாய் நிரம்பாதெனக் கொள்க. இந்நூலுடையார் எதுகையே கருவியாக அடி வகுத்தார் என்க.

(13)


1. யாப்ப - வி. சூ. 2 மேற்கோள்.