17

பதத்தின் பின்னர் வருமொழிமுதல் வல்லினம் வந்து புணர்ந்தால், அந்த மகரமானது அவ்வவ்வந்த வல்லொற்றும் வல்லின வர்க்க ஒற்றுமாம்; ஞ ந மக்கள் பின் வரில் சாற்று ம போம் - 1வருமொழி முதல் ஞ ந மக்கள் வந்து புணர்ந்தால், அந்த மகாரமானது கெடும்; முன் வயின் கால் வ வரின் - 2வருமொழி முதல் வகரம் வந்து புணர்ந்தால், அந்த மகரமானது குறுகிக் கால் மாத்திரையாய் உட்புள்ளி பெறும்; பதின்மூன்றாம் உடல் அழியும் பின் வயின் த வரின் தவ்வும் கடைவன்மை பேறுறுமே - 3லகார ஒற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் தகாரம் வந்து புணர்ந்தால், அந்த லகாரமானது கெட்டு வந்த தகாரமும் றகாரமாகப் பெறும் (எ-று.)

(19)

20. னகரமெய் நகரத்தோடும் தகரத்தோடும் புணர்தலும்,
உயிர் வல்லினத்தோடு புணர்தலும்

ஈற்றின்பின் நவ்வரி னீற்றெழுத் தாம்;எழில் தவ்வரில்தவ்
வேற்றுப் பதினேழ தாமுட லாம்;எய்தும் ஆவியின்பின்
ஆற்றுந் திறல்வல் லினம்வந் திடிலவற் றின்வருக்கம்
போற்று மிவையென்ற வல்லொற்று மெல்லொற்றும் புக்கிடுமே.

(இ-ள்.) ஈற்றின் பின் ந வரின் ஈற்றெழுத்தாம் - 4னகர ஒற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் நகாரம் வந்து புணர்ந்தால், வந்த நகாரமும் அப்பதினெட்டாம் உடலாகிய னகாரமாம்; எழில் த வரில் த வேற்றுப் பதினேழதாம்


1. தாம் + ஞாலத்தார் = தாஞாலத்தார்.
தாம் + நன்னெறியார் = தாநன்னெறியார்.
தாம் + மேலோர் = தாமேலோர்.

(இவை வேறு பிரதியில் உள்ள உதாரணங்கள்.)

மரம் + நார் = மர நார்.
மரம் + நீண்டது = மர நீண்டது.
வட்டம் + நேமி = வட்ட நேமி.

2. மரம் + வள்ளிது = மரம் வள்ளிது.

(இது வேறு பிரதியில் உள்ள உதாரணம்.)

தரும் + வளவன் = தரும் வளவன்.

3. தோன்றல் + தீயன் = தோன்றறீயன்.

4. பொன் + நன்று = பொன்னன்று.