யிற்றின் நாற்சீரடியாய் வருவன சிந்தாகவும், ஒழிந்தன சிந்துப் போலியாகவும் வழங்குப எனக் கொள்க.
தனி வெண்பாவாவது,
'ஒன்றைந்தெட் டாகியசீ ரொத்த வெதுகையாய்
நின்றபதின் மூன்றொன்பா னேரொத்து--நன்றியலு
நீடுசீர் மூவைந்தா னேரிசைவெண் பாவென்பர்
நாடுசீர் நாப்புலவர் நன்கு.
இது நாலடியாகிப் பதினைந்து சீராய் நடுவு தனிச்சொற் பெற்று வந்தவாறு கண்டுகொள்க.
(இ - ள்.) முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் எட்டாம்சீரும் தம்மில் ஒத்த எதுகையாய், பதின்மூன்றாம் சீரும் ஒன்பதாஞ் சீரும் ஒத்த எதுகையாய்ப் பதினைந்து சீரால் வந்தது வெண்பாவாம்; இதனை நேரிசை வெண்பா என்பாருமுளர்.
'நிகரி லிருவிகற்ப நேரிசைவெண் பாவைப்
பகரிற் பரிசறிவார் மாட்டுப் - புகரிலா
இன்குறள் வெண்பா விரண்டாய்த் தனிச்சொல்லு
நன்குறளாய் நிற்கு நடு.
'மூண்டுமலி நேரிசை வெண்பா முதற்குறட்பா
வேண்டுதனிச் சொல்லோடு விட்டிசைக்கில் --ஆண்டடியில்
ஆசிடை யொன்றிரண்டு வந்தமர்ந்தான் மற்றதன்பேர்
ஆசிடை வெண்பாவென் றார்.
இனி வெண்பாப் போலியாவது, இவ்விலக்கணங்களான் மிக்கும், குறைந்தும் இதுவே போல வரும்.
வரலாறு:-
*'வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை
அளந்தன போக மவரவ ராற்றான்
விளங்காய் திரட்டினா ரில்லை
களங்கனியைக் காரெனச் செய்தாரு மில்.
*'இதனையும் கீழ்வரும் 'கடற்குட்டம்' என்பதனையும் முதன் மூன்றடியும் அளவடியாய் ஈற்றடி சிந்தடியாய் இன்னிசை வெண்பா எனப்பிறர் கொள்ளுப. எதுகை கருவியாகக் கொண்டு அடி வகுப்பார் இன்னிசை வெண்பாவையும் வெண்பாப் போலியின் அமைத்தமையான் அன்றோ இவ்வாசிரியர் அடிவரையறை நோக்காது ஈற்றில் அளவடியும் இடையில் நெடிலடியும் பொருத்தி இவ்வாறு இடர்ப்பட்டது' என்பது பழைய குறிப்பு.