179

எழுத்தளவும் இட்டால் அவ்வடி இதுவென வெளிப்படும்; ஆதி முழு இலகுவின் நட்டம் இலகு சொன்ன இடத்திற் குருவைத்துக் குருச் சொன்ன இடத்து இலகு வைத்து அடியிட்டுக் கொள்க.

'எனைத்தாவ தென்றறிவ னிட்டதறி யென்றால்
அனைத்தரைசெய் தாண்டிலகு வைக்க--நினைத்ததனை
விள்ளத்தா னாகாதேல் வேறோ ரலகிட்டுக்
கொள்ளத்தா னாகுங் குரு.'

(29)

136. உத்திட்டம் என்னும் தெளிவின் இலக்கணம்

காட்டிய வீடெனைத் தாவதென் றாலதன் கண்ணெழுத்திற்
கூட்டிய வொன்றாதி கொண்ட திரட்டித்துக் கோப்பியல
நாட்டிய சீரில குக்களின் மேனண் ணியவிலக்கம்
ஈட்டியங் கொன்றிட் டுரைக்கு மிதனையுத் திட்டமென்னே.

(இ-ள்.) உத்திட்டமாவது சொல்லுவான் எடுத்துக்கொண்டான். உத்திட்டம் ஆதி முழுக் குருவின் உத்திட்டம், ஆதி முழு இலகுவின் உத்திட்டம் என இரண்டு வகைப்படும். அவற்றுள் ஆதி முழுக் குருவின் உத்திட்டத்துக்கு இலக்கணமாவது, ஓரடியில் குரு இலகுவிட்டது இன்னதனையாமடி என்று சொல்லென்றால், அவ்வடியில் எழுத்துக்களுக்கு ஒன்று முதலாகக் கொண்டு இரட்டியாய் ஈற்றளவும் இலக்கமிட்டு இலகுவின்மேல் எண்ணெலாந் தொகுத்து ஒன்றிட அதற்கு எண்ணாம் (எ-று.)

'ஒன்றிரண்டு நான்கெட்டென் றுள்ளளவுஞ் சேர்த்திரட்டித்
தென்று மிலகுவின்மே லெண்களோ--டொன்றிட்டு
வைத்திம் முறைமை வழுவாமை கண்டுய்ப்ப
துத்திட்டஞ் சுட்டெனினு மொன்று.'

ஆதி முழு இலகுவின் உத்திட்டம் குருவின்மேல் எண்களில் ஒன்றிட்டுச் சொல்லுக.

(30)

137. ஓர் இலகு முதலாக உடைய விருத்தங்களை அறிதல்

ஓங்கிய சந்தத் தெழுத்துக் களைவீ டிரண்டொருமூன்
றாங்கிய னான்கைந்தொ டாறே ழெனவிரண் டாலிசைத்துத்
தாங்கிய வீடொன்றொன் றீறொழித் திட்டுத் தமதயலெண்
பாங்கிற் றொகுத்து லகுக்குருப் பெய்து பகர்தொகையோ.

(இ-ள்.) இன்ன சந்தத்து, ஓரிலகு உடைய விருத்தம் எத்தனை? இரண்டிலகு உடைய விருத்தம் எத்தனை? மூன்றிலகு உடைய