139. சந்தத்தின் தொகை, அளவு முதலியன
எழுத்த ளவுமிரண் டேமுத லாய்க்கொண் டிரட்டிசெய்யக்
குழுத்த விறுதித் தொகையே தொகை;குல வுந்தொகையை
அழுத்த விரட்டிசெய் தங்கொன்று நீக்க வதுவுறழ்வால்
விழுத்த வியன்ற நிலத்தின் விரலென்ப மெல்லியலே !
(இ-ள்.) தான் வேண்டின சந்தத்தின் எழுத்தளவாக இரண்டு முதலாக இரட்டித்து ஈற்றளவும் இலக்கம் இட்டால், ஈற்றில் நின்ற தொகை அச்சந்தத்திற்குத் தொகையாம்; அத்தொகையை இரட்டித்து ஒன்று களைய அச்சந்தம் உறழும் நிலத்திற்கு விரலளவாம். அகலத்திற்கும் அச்சந்தத்தில் எழுத்தை இரட்டித்து ஒன்றை நீக்க அகலம் விரலளவாம் (எ-று.)
'இரண்டுநான் கெட்டுப் பதினாறு முப்பத்
திரண்டறுபத் தீரிரண் டேறப் -- பொருந்திய
வுத்த முதலாக வுற்கிருதி யீறாக
வைத்துரைப்பார் நாவல் லவர்.'
'விருத்த விரியிரட்டித் தோர்விர னீக்க
விருத்த விரற்களவை யாம்.'
'ஒருவிரற்கு மெய்யுணரின் மூன்றிறந்த சந்தம்
விரிமூன்று தொட்டுமே லேற-விரறுடங்கி
யீறு முதலாக விவ்வளவு மேய்ந்ததொகை
வேறுபா டின்றி விளம்பு.'
'ஆதி யிரட்டித் ததனகத் தொன்றிடினும்
வேறுபா டில்லை விரல்.'
'மூன்றேழு மூவைந்து முப்பதின்மே லொன்றதுவு
மூன்றுடைய மூவிரு பஃதுமெனத்-தோன்ற
வரற்றொகைவா னன்றாகக் காணுமே சந்த
விரற்றொகையா னின்ற விரி.'
இவற்றை விரித்துரைத்துக்கொள்க. இனி விரற்குப் பிரமாணமாமாறு:
'அணுத்தேர்த் துகள்பஞ்சிற் றூய்மயி ரன்றி
மணற்கடுகு நெல்விரலென் றேற - வணுத்தொடங்கி
எட்டோடு மன்னுவிரற் பன்னிரண்டாற் சாணாக்கில்
அச்சா ணிரண்டுமுழ மாம்.'