182

'முழநான்கு கோலக்கோ லைஞ்ஞூறு கூப்பீ
டவைநான்கு காதத் தளவாம்--பழுதின்
றுளநிறைந்த தொல்லோ ருரைசெய்த துண்மை
யளவிறந்த தன்மைநிலை யாம்.'

'ஈரைஞ்ஞூ றெண்மூன் றியல்பின் பிரிந்தக்கால்
ஈரைந்தாஞ் சந்தத்தி லெண்.'

'எட்டொன் றிருபான்மூன் றென்ன வருமூன்றற்
கொட்டிய சந்த விரி.'

'மதிலிரண்டு மாமாறும் வாய்ந்த வசுக்கள்
பதினைந்தாஞ் சந்தப் பரப்பு.'

'இரண்டீ ரிரண்டிரு நான்கிரு நான்காம்
இரண்டென்ப பாதத்தி லெண்.'

'ஒருபாழ் பரவையோ ரெட்டைந்தோ ரேழா
றிருபதாஞ் சந்தத்தி லெண்.'

'இருநான்கு திக்கிசை யெட்டாறு சுன்னெட்
டிருபான்மேன் மூன்றா மியல்பு.'

'ஆறே ழுருபுபா ழெட்டோடு மாங்கலை
வீறுத்த மாதி விளம்பிருபா--னாறாக
மாறுற் கிருதி மகிழ்வினாற் செய்துலகிற்
கூறுக தேறும் பொருள்.'

'ஏற்புடைய காதங் குறைந்த வெழுநூறு
நூற்றொருகால் கைவிரலே ழுற்கிருதி--யாற்ற
மொழிந்தவிரு பத்தாறா முன்னிய சந்த
மொழிந்தனவு மிவ்வாறே யொட்டு.'

என இவையிற்றை விரித்துரைத்துக் கண்டுகொள்க.

இனி அந்தச் சந்தங்கள் நின்ற பெயரும் முறையும் ஆமாறு சொல்லுதும்.

'ஒத்தமைந்த சந்தப் பொதுப்பெய ராய்ந்துரைப்பி
னுத்த மதியுத்த மத்திம மொத்தநிலை
நன்னிலை காயத் திரியுட னுண்டி
யனுட்டுப் பொடுபகுதி பந்தி வனப்புச்
சயதி யதிசயதி சக்குவரி மற்றையதி
சக்குவரி யாடியதி யாடி திருதி
அதிதிருதி யோடு கிருதி பிரகிருதி
யாகிருதி விக்கிருதி சங்கிருதி மேலும்