189

மொவ்வா தனவுஞ் சமமும் வியமமுமென்
றெய்தா விருத்தத் தியல்பு."

இதனால் ஓரடிபோல நான்கடியும் எழுத்தும் அலகுமொத்த விருத்தம் சமம் என்றும், இவ்விரண்டடியாய்த் தம்முள் எழுத்தும் அலகும் ஒத்து வருவன பாதிச்சமம் என்றும், ஓரடியுந் தம்மில் எழுத்தும் அலகும் ஒவ்வாது வருவன வியமம் என்றுஞ் சொல்லப்படும்.

'பாத மிரண்டிரண் டொத்துக் குறைந்தனகொள்
பாதிச் சமமாப் பகுத்து.'

இரண்டு இரண்டு அடியாகக் குறைந்து வருவனவும், இவ்வாறே மிக்கு வருவனவும், இவ்வாறே அடியொத்தும் ஒவ்வாதும் வருவனவும் பாதிச் சமவிருத்தத்தின்பாற் சார்த்தி வழங்குப. அவை வருமாறு :

"உழைபிரி வறியா தானந்த நாதநிற்
றழையார்தங்கு காவலர்
விழைநகு வேளு மணங்கு மேனியார்
குழைவொடு கலைகெட்டுக் குன்ற வாணரே."

இது முதலடியும் நான்காம் அடியுந் தம்முள் அளவொத்தும், ஏனைய குறைந்தும் வந்தது.

'கனங்கழுவு கார்வா னுழுதகையும்
வனங்குலவு கோட்டு மலரும்
புனங்குலவு பூந்தாது
மனங்கசர மானாதல்.'

இது நான்கடியும் எழுத்திடையிட்டு மாத்திரை குறைந்து வந்தது.

"காவியோ கயலோ கழுநீர்களோ
ஆவியோ துணைவா வரவிந்தமோ
வாவியினன் மலரருந் தார்நறு
நாவிவார்குழ னீள நயனமே."

இது நான்கடியும் எழுத்தொத்து, முன்னிரண்டடியும் மாத்திரை மிக்கு, ஏனையடி மாத்திரை குறைந்து வந்தது.

"கொண்ட லெங்கு நிரந்தன கோபுரந்
தண்டு ளக்கரும் பீன்ற தளவமே
வண்டு பாட நடித்தன மஞ்ஞையே
பண்டு போனவர் சொன்ன பருவமே."