19

அவற்றின் மெல்லொற்று ஏவியவாறு எழில் வல்லொற்றுமாம் - 1பின்னும் அந்நிலைமொழி யீற்றுக் குற்றியலுகரத்தின் முன்னர் நின்ற மெல்லொற்றானது வல்லொற்றாதலுமாம்; இனி வன்மையொற்றுமேவி அதன் முன் விளைதலும் வேண்டுவர் - 2பின்னும் அந்நிலை மொழியினது ஈற்றுக் குற்றியலுகரத்தின் முன்னர் ஒருவல்லொற்று வரப்பெறலுமாமென்பர் ; ஆவி வந்தால் பாவிய முற்றுகரத்தின் சிதைவும் பகர்ந்தனரே - 3வருமொழி உயிர்முதலாகிய மொழி வந்து புணர்ந்தால், நிலைமொழியீற்று முற்றியலுகரமுங் கெடும் என்று சொல்லுவர் மேலாகிய புலவர் (எ-று.)

(21)

22. லகரமெய் மகர தகரங்களோடு புணர்தலும், னகரமெய்யும் ணகரமெய்யும்
வல்லினத்தோடு புணர்தலும், உயிரோடு கூடிய ழகரம் உயிர் முதல் மொழியோடு புணர்தலும்

ஈறாம் லகார மதவந் தெதிர்ந்திடில்; ஈற்றெழுத்தேல்
ஆறாங் கடைவன்மை யாம்வன்மை தோன்றில் ;ஐந் தாமுடலாம்
ஆறா முடல்வல் லினம்வரின்; ஆவிமு னாவியொடுங்
கூறா ழகார மழிந்து டகாரங் குறுகிடுமே.

(இ-ள்.) ஈறாம் லகாரம் ம த வந்தெதிர்ந்திடில் - 4லகரவொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் மகார தகாரங்கள் வந்து புணர்ந்தால், அந்த லகாரமானது னகாரமாம்; ஈற்றெழுத்தேல் ஆறாம் கடை வன்மையாம் வன்மை தோன்றில் - 5னகரவொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் வல்லினம் வந்து புணர்ந்தால், அந்த னகாரமானது ஆறாம் வல்லினவெழுத்தாகிய றகாரமாம்; ஐந்தாம் உடலாம் ஆறாம் உடல்


1. கன்று + ஆ = கற்றா.
சுரும்பு + நாண் = சுருப்பு நாண்.
கரும்பு + வில் = கருப்பு வில்.

2. மருந்து + பை = மருத்துப் பை.
குரங்கு + கால் = குரக்குக் கால். (இது வேறு பிரதியில் உள்ள உதாரணம்)

3. கதவு + அழகிது = கதவழகிது.

4. நெல் + முனை = நென்முனை.

நிலைமொழியீற்று லகரம், தகரம்வர னகரமாகத் திரிதற்கு உதாரணம் வந்தவழிக்காண்க.

5. பொன் + தகடு = பொற்றகடு.