191

மூவுயிர்க் குறுக்கங்களைக் குறில் போலவும், புலுதத்தை நெடில் போலவுங் கொள்ளப்படும். இவற்றுள் இலகுவை மால் என்றும் குருவை ஈசன் என்றும் பெயரிட்டு வழங்குப.

*"குருவிலகு மும்மையு முற்றாய வாதி
மருவுடை யீற்று வருவ--நிரையே
நிலனிய மானன் மதிநீ ரிரவி
கனல்கால் வெளியென்று காட்டு."

அசை மும்மூன்றாகக் குரு இலகு உறழ்ந்து வருங்காற் கணம் என்றும்; முற்றக் குரு வரின், நிலமென்றும்; இலகு முற்ற வரின், +இயமானன் என்றுந் தானம் பெறும். முதலிற் குரு வரின் மதியென்றும்; இலகு வரின் நீரென்றும்; இடையிற் குருவரின் இரவி என்றும்; இலகு வரின் கனல் என்றும்; கடையிற் குரு வரின் கால் என்றும்; இலகு வரின் வெளி என்றும் உரைக்கப்படும். இவை முன் வருஞ் செய்யுளும் அக்கண வகையால் அறியப்படும். 'மாத்திரையால் விருத்தவிரி சார்த்தி யுணர்வாகும்' என்பதனால் அறிக. இரண்டெழுத்து முதல் நான்கு இலகு கூடிய கணம் திரண்ட ஏழிறுதியோர் குரு வரின் பாதமாம். பிற்பாகத்தாறாம் இடத்து ஓரிலகுவே வரும். ஒற்றித்த இடக்கணத்து இடைக் குரு வரின் வழுவாம்.

வரலாறு:-

"அம்பொற் கயிலைக் கிறைவர்
வலங்காரம் பெறாத நோதகவினால்


* 'தமிழ் யாப்புடையார்,

"ஆதி யிடையிறுதி முற்றுநே ராநிரையென்
றோதுவர்நீர் தீமாக மொண்சுவர்க்கந்--தீதிலோர்
சொற்றார் மதிபரிதி கானிலமா நீர்மதியு
முற்றா யவுமுன் மொழிக்கு."

எனக் கணலக்கணங் கூறுவர். மேலும் நேரசை ஓரலகும் நிரையசை ஈரலகும் உடைய என்பர். ஆதலால், இருகூற்றினரும் மாத்திரை வகையாற் பெயர் முறை ஒப்புமையுடையர். ஆயினும், இந்நூலுடையார்க்குத் தனிக்குறில் தவிர்ந்த மற்றைய நேரசையாவும் குருவின் பாற்பட்டு ஈரலகு பெறுதலின் இருவரும் வழக்கின்கண் முரணுவரென்று அறிக.'

+ 'இயமானனைத் துறக்கம் என்றும் பெயர் கூறுவர்,' என்பன பழைய குறிப்பு.