193

ஒன்றிப் பலகோப முள்ளினான்
வென்றிக் கார்முக வேந்து மாரவேள்."

எனவும்,

"கானத்தண் கொன்றை மாலைதா
மானத்தின்றென் கொம்பு வாடுமால்
வானத்திங் கட்கு மாறுகொல்
நானித்தாற் றிலனாரி பாகனே."

எனவும் இவ்வாறன்றிப் பிறவாறு வருவனவுங் கண்டுகொள்க.

இனி,

"குருலகுமுற் றாயுங் குருலகு மாறி
வரினுமது மைகாச மானங்--குருலகுவின்
பின்றான் வரிற்பிர மாணம் விதானமா
மென்றா ரிரண்டா மெனின்."

நான்கடியும் முற்றக் குருவே வரினும், முற்ற லகுவே வரினும், குருவும் இலகுவுமாய் முறையே மாறி வரினும் மைகாசமானம் என்று பெயராம். இலகுவின் பின் குருவாய் முற்றவரிற் பிரமாணமாம் . இரண்டிலகுவும் இரண்டு குருவுமாய் முற்ற வரின் விதானமாம் என்றார் எனக்கொள்க. அவை வருமாறு:-

"காரார் தோகைக் கண்ணார் சாயற்
றேரா ரல்குற் றேனார் தீஞ்சொற்
போரார் வேற்கட் பொன்னே யின்னே
வாரா ரானார் போனார் தாமே,"

இது முற்றக் குருவே வந்த மைகாசமானம்.

"வேரி சேரு மீது லாவு
மாரி கூரு மீர வாளி
வீர மார னேவி னாலு
நாரி சோர மேவு நோவு."

இது குருவும் இலகுவு முறையே வந்த மைகாசமானம்.

"இணங்கு மாத ரேசவே யிரங்கி மோத வேலைமா
னணங்கு லாவு வாளியா னணிந்த சாப மாயமா
றுணங்கி மேனி வாடுமா லுறந்தை யாளு மானதா
வணங்கி னாவி காவனீ யணிந்த வார மாகுலம்."

இது பிரமாணம்.