"மதுவாய்சேர் மலரானே மயறாவா முறையானே
முதுவானோர் தொழுதாளாய் முரணாவாய் மொழியானே
கதுவார்சேர் மதியானே கழியாநோ வொழியாவா
றிதுவானா லிறையோனே யினியாழே நினையாளே."
இது இரண்டிலகுவும் இரண்டு குருவும் முறையானே வந்த விதானம்.
இவையெல்லாஞ் சந்தக் கூறுபாட்டான் வந்தன. மற்றுஞ் சந்தங்கட்கும் இப்படியே வருவன அறிந்து பெயரிட்டு வழங்குக.
"ஓரெழுத்துக் குன்றினனி சாத்தாம் விராட்டாகு
மீரெழுத்துக் குன்றி னியமான--னேராப்போ
யோரெழுத்து மிக்க புரிக்காஞ் சுராட்டென்ப
வீரெழுத்து மிக்க வெனின்."
இதன் பொருள், மேற்சொன்ன விருத்தங்கள் ஓரெழுத்துக் குன்றில் அணிசாத்து என்றும், ஈரெழுத்துக் குன்றின் விராட்டு என்றும், ஓரெழுத்து மிகிற் புரிக்கு என்றும், இரண்டெழுத்து மிகிற் சுராட்டு என்றும் இப்படிப் பெயரிட்டு வழங்கப்படும். அவை வந்த வழிக் கண்டுகொள்க. முதலடியும் ஈற்றடியும் ஓரெழுத்துக் குறைந்து இடையிரண்டடியும் மிக்கு வந்தன பவமத்திமம் என்றும் இவை இரண்டடியுங் குறைந்து, முதலடியும் ஈற்றடியும் மிக்கு வந்தன பீலிகாமத்திமம் என்றும் பெயரிட்டு வழங்கப்படும். இவையும் வந்தவழிக் கண்டுகொள்க. மேற்போன விருத்தங்கட்கு எழுத்தும் அலகும் இன்ன துணை எனவும், நான்கடிக்கு இன்ன துணை எனவும் அறிதற்கு இலக்கணம்,
"சந்த வெழுத்தலகிற் றள்ளி யரைசெய்து
சந்த வெழுத்தி னரைகூட்ட--முந்துகுருப்
பாதத் தளவாகும் பாதமே மாறிவர
ஏதந்தீர் நான்கடிக்கு மெண்."
என்பதனாலறிக. இனித் தண்டகம் ஆமாறு சொல்லுதும்.
(33)
140. தண்டகமாமாறு
மருவு நெடில்குறில் வல்லொற்று மெல்லொற் றிடையிலொற்றென்(று)
உருவந் திகழ்ந்தவை யுய்க்குங் குறிகளொப் பார்நிரைநேர்
துருவ மலிபுள்ளி வட்டம் விலகென்பர் தொன்மைகுன்றாத்
திருவு மழகும் புகழுந் திகழ்தரு தேமொழியே !