141. இதுவும் அது
இப்படிக் கட்டளைத் துண்டமொன் றாக்கிய தீரிரண்டில்
ஒப்புடை யெட்டிற் பதினாறி னின்முப்பத் தோரிரண்டிற்
செப்பிட வாக்குக தண்டகம் வல்லொற்றல் லாதவொற்றுத்
துப்புட னுச்சா ரணையினல் லான்மிகத் தோன்றரிதே.
(இ-ள்.) முன்பு சொன்ன குறிகளால் ஒரு கட்டளைத் துண்டத்தையிட்டு அத்துண்டம் நாலாற்றான், எட்டாற்றான், பதினாறாற்றான், முப்பத்திரண்டாற்றான் முடிக்க அது தண்டகமாம்; அதன்கண் வல்லொற்றல்லாத ஒற்று உச்சாரணை இல்லாது குறி பெறுகை அரிது (எ-று.)
முன் சொன்ன தண்டகம் பதினாறு துண்டத்தால் வந்தது; பிறவுமன்ன. இக்கட்டளை பிழைக்கில் அது தண்டகப்போலியாம். இனி வண்ணமிருபதாவது சொல்லுதும்.
(35)
142. வண்ணமாமாறு
மெல்லிசை யேந்த லொழுகுருட் டெண்ணொரு வேமுடுகு
வல்லியல் பாவகப் பாட்டு நலிவகைப் போடியைபு
சொல்லிய சித்திரந் தாவு புறப்பாட் டளபெடையும்
வல்லிசை தூங்கல் நெடுஞ்சீர் குறுஞ்சீ ரிவைவண்ணமே.
(இ-ள்.) மெல்லிசை வண்ணமுதல் குறுஞ்சீர் வண்ணமீறாகக் கூறியன இருபதும் வண்ணமாம் (எ-று.)
மெல்லிசை வண்ணமாவது, மெல்லெழுத்து மிகுவது. ஏந்தல் வண்ணமாவது, சொன்ன சொல்லே சிறந்து வருவது. ஒழுகு வண்ணமாவது, ஓசையினொழுகுவது. உருட்டு வண்ணமாவது, அராகந்தொடுப்பது. எண்ணு வண்ணமாவது, எண் பெயர் மிக்கு வருவது. ஒரூஉ வண்ணமாவது, அடியடிதோறும் ஒன்றாய்த் தொடையுடைத்தாவது. முடுகு வண்ணமாவது, அடியிற்றது அறியலாகாதாய், நீண்ட அடித்தாய் அராகத்தோடு கூடி வருவது. பாவு வண்ணமாவது, நூற்பாப் பயில வருவது. அகப்பாட்டு வண்ணமாவது, முடியாதது போல முடிவது. நலிவு வண்ணமாவது, ஆய்தமுடைத்தாய் வருவது. அகைப்பு வண்ணமாவது, அறுத்தறுத்து ஒழுகுவது. இயைபு வண்ணமாவது, இடையெழுத்து மிகுவது. சித்திர வண்ணமாவது, குற்றெழுத்தும் நெட்டெழுத்தும் விரவி வருவது. தாவு வண்ணமாவது, இடையிட்டு