20

வல்லினம் வரின் - 1ணகரவொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் வல்லினம் வந்து புணர்ந்தால், அந்த ணகாரமானது டகாரமாம்; ஆவி முன் ஆவியொடும் கூறா ழகாரம் அழிந்து டகாரங் குறுகிடுமே - 2வருமொழி உயிர்முதலாகிய மொழிவந்து புணர்ந்தால், நிலைமொழியினது ஈற்றில் நின்ற ழகாரமானது தன் முன்னின்ற உயிரோடும் அழிந்து ஐந்தாம் உடலாகிய டகாரமாம் (எ-று.).

(22)

23. ஒன்று முதல் பத்தீறாகிய எண்களும், நூறு என்னும் எண்ணும்
அடையும் விகாரங்கள்

ஒன்றுக் கொருவோர் இருவீர் இரண்டுக்கு மூன்றுமும்மூ
அன்றுற்ற நாலுக்கு நான்கைந்தை யாறறு ஏழெழுவாம்;
தொன்றுற்ற எட்டுக்கெண் ணொன்பதொன் பானொடு தொண்டொள்ளும்;பான்
பன்றுற்ற நூறு பதுபஃது பத்து;நூ றாயிரமே.

(இ-ள்.) ஒன்றுக்கு ஒரு ஓர் - 3ஒன்றென்னும் எண்ணுக்கு ஒரு என்பதும் ஓர் என்பதும் ஆதேசமாம்; இரு இர் இரண்டுக்கு - இரண்டென்னும் எண்ணுக்கு இரு என்பதும் ஈரென்பதுமாதேசமாம்; மூன்று மு மூ - மூன்றென்னும் எண்ணுக்கு மு என்பதும் மூ என்பதும் ஆதேசமாம்; அன்றுற்ற நாலுக்கு நான்கு - நாலென்னுமெண்ணுக்கு நான்கென்பது ஆதேசமாம் ; ஐந்தை-ஐந்தென்னுமெண்ணுக்கு ஐயென்பதாதேசமாம்; ஆறு அறு = ஆறென்னும் எண்ணுக்கு அறுவென்பது ஆதேசமாம்; ஏழ் எழுவாம் - ஏழென்னும் எண்ணுக்கு எழுவென்பது ஆதேசமாம்; தொன்றுற்ற எட்டுக்கு எண் - எட்டென்னும் எண்ணுக்கு எண்


1. சிறு கண் + களிறு = சிறுகட்களிறு.

2. நாழி + உரி = நாடுரி.

3. ஒன்று + குன்று = ஒரு குன்று.
ஒன்று + ஆகம் = ஓராகம்.
இரண்டு + குன்று = இரு குன்று.
இரண்டு + இலை = ஈரிலை.
மூன்று + குணம் = முக்குணம்.
மூன்று + நீர் = முந்நீர்.
மூன்று + ஆண்டு = மூவாண்டு.
நால் + மலை = நான்கு மலை.
நால் + தோள் = நான்கு தோள்.