203

யினை உடையதென்பது ; சமதை என்னும் உயிர், ஒத்திருந்த பதங்களை உடையது; சமாதி என்னும் உயிர், ஒன்றின் பக்கலுள்ளது ஒரு பண்பையே உலகுக்கு ஒத்திருக்கும் வண்ணம் அப்பண்பு குன்றியிருப்பதொன்றின்கண் உண்டாகப் புணர்ப்பது; சுகுமாரதையாவது, வல்லொற்று நீங்கியுள்ள சொற்களால் ஆக்கப்பட்டு மெல்லிதாயிருப்பது (எ-று.)

(8)

151. இதுவும் அது.

*ஆனா வழகினைக் காந்தியென் கின்ற ததுதமிழின்
நானா விதமாய் நடைபெற் றியலு நனிபுகட்சி
தானா மிடத்தினும் வார்த்தையின் கண்ணுந் தலைசிறந்து
தேனாய் விதர்ப்பருக் குங்கவு டர்க்குந் திறப்படுமே.

(இ-ள்.) காந்தி என்னுமலங்காரம் யாப்பு வனப்பெனக் கொள்க; அது தமிழிற் பல கூறுபாடு பெற்றுப் புகட்சியினும் வார்த்தையினும் உலகிறந்த நன்பொருட்பொலிவான் நின்று விதர்ப்பர்க்குங் கௌடர்க்கும் நெறிப்பட்டியலும் (எ-று.)

'ஒழிந்த அலங்காரங்களோ?' எனின், அவ்வப்பெயராலே தம்பொருள் விளங்கி இருக்கும் எனக் கொள்க.

வரலாறு:-

1"பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு."

இது சொற்செறிவுடைமையாற் சிலீட்டம் என்னும் உயிராயிற்று. இது சிலீட்டை எனவுமமையும்.

2"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு."


*"ஆனா வுலகிற் கரும்புகழ் காந்தி கொடைப்புகட்சி
தானா முதாரம் பொருள்விளக் குஞ்செய்யு டான்புலனாந்
தேனார்சொல் லன்றிப் பொருளாற் றெளியிற் பொருட்டெளிவாந்
தானாடு சொற்பொரு ளிற்சுவை தோன்றிற் றகுமின்பமே."

என எஞ்சியவற்றையுஞ் சேர்த்துப் பிற்காலத்துச் செய்யப்பட்ட சூத்திரம் ஒன்று மதுரை நாட்டுப் பிரதிகளில் உள்ளது," என்பது பழைய குறிப்பு.

1. திருக்குறள்,350. 2. திருக்குறள், 27.