207

நாகத்தர் சூலத்தர் நன்னுதலா டானிருந்த
பாகத்த ரென்றே பரசு."

இது திரப்பியத்தின் தன்மையைச் சொன்னமையால், திரப்பியத் தன்மை என்னும் அலங்காரமாயிற்று.

"உருப்பெறக் கிடந்த வுண்மைசான் மரபின்
திரப்பியம் பகர்வது திரப்பியத் தன்மை."

எனக் கொள்க.

"துண்டஞ் சிவந்திறகும் பச்சையாய்த் தொன்மைத்தார்
கண்டம் பொலியக் கவின்பெற் றனகிளியே."

என்றும்; 'பசுங்காய், கருங்காக்கை' என்றும்; 'செம்பவளம், வெண்குருகு' என்றும் இன்னவையெல்லாஞ் சாதியினுடைய தன்மையைச் சொன்னமையாற் சாதித்தன்மை என்னும் அலங்காரமாயிற்று. பிறவும் அன்ன.

"இன்மை யிகழா தினத்திற் கொத்த
தன்மையிட் டுரைப்பது சாதித் தன்மை."

எனக் கொள்க.

"முற்குளம்பி னாற்கிளறி மோந்தங்கோர் முக்காலும்
பொற்சுண்ண மாடிப் புரண்டெழுந்து--நற்சென்னி
நேர்நிறுத்தி நின்றுதறிக் கங்கைநீ ருண்டனவே
பானிறத்த மால்வெண் பரி."

இது தொழிலின் தன்மையைச் சொன்னமையால், தொழிற்றன்மை என்னும் அலங்காரமாயிற்று.

"பழுதில் செய்வினை பதந்தொறும் வருவது
தொழிலின் தன்மை யென்மனார் புலவர்."

எனக் கொள்க.

1எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைக்க வருவதொன் *றுண்டு."


1. திருக்குறள், 1202.

* "இல் என்று பாடமோதித் துன்பம் எதிர்நிலை எழுவாயாகக் கொண்டார் பரிமேலழகர். இனிதே என முன்னர் நிறுத்தினமையானும், துன்பம் இல்லாவழியெல்லாம் இன்பமேயுளது என்பது சாத்தியமாகாமையானும், புணர்ந்துழியும் பிரிந்துழியும் இனிமையுண்மை கூறலே நாயனார் கருத்தாதலானும் அஃது சிறப்பன்றென மறுக்க. அன்றியும், உண்டென்பதே பழம்பிரதிகளின் பாடமுமாம்," என்பது பழைய குறிப்பு.