21

என்பது ஆதேசமாம்; ஒன்பது ஒன்பானொடு தொண்டொள்ளும் - 1 ஒன்பதென்னும் எண்ணுக்கு ஒன்பான் என்பதும் தொண் என்பதும் தொள் என்பதும் ஆதேசமாம்; பான் பன் துற்ற நூறு பது பஃது பத்து - பத்தென்னும் எண்ணுக்குப் பான் என்பதும் பன் என்பதும் நூறென்பதும் பது என்பதும் பஃது என்பதும் ஆதேசமாம்; நூறு ஆயிரமே - நூறென்னும் எண்ணுக்கு ஆயிரம் என்பது ஆதேசமாம் (எ-று.)

(23)

24. உயிர்க்குற்றெழுத்து ஞ ந ம வ என்பவற்றுடனும் யகரத்துடனும் புணர்தலும்,
டகரம் ணகரமாதலும், ஒரோவிடத்து ஒற்றுத்தோன்றுதலும், சில மொழிகளின்
ஈற்று ஆகாரம் குறுகி அதனோடு உகரம் பெறுதலும்

ஆவிக் குறிற்பின் ஞநமவத் தோன்றிலவ் வொற்றிடையாம்;
மேவிய பன்னொன்று தோன்றில்வவ் வாம;மெய்யில் ஐந்திருமூன்
றாவது முண்(ட):ஒற் றொரோவழித் தோன்றிடும்; ஆவுமவ்வாய்த்
தாவிய வைந்தா முயிர்பின் பெறுவன தாமுமுண்டே.

(இ-ள்,) ஆவி குறில் பின் ஞ ந ம வ தோன்றில் அவ்வொற்றிடையாம் - 2உயிர்க்குற்றெழுத்தின் பின்னர் வருமொழி முதல்


ஐந்து + தலை = ஐந்தலை
ஆறு + முகம் = அறு முகம்
ஏழு + கிரி = எழு கிரி
எட்டு + திசை = எண்டிசை

1. ஒன்பது + ஒடு = ஒன்பானொடு (நன். சூ. 194.)
ஒன்பது + பத்து= தொண்ணூறு

இதில் ஒன்பது என்பது தொண் என்றும், பத்து என்பது நூறு என்றுந் திரிந்தமை அறிக.

ஒன்பது + நூறு = தொள்ளாயிரம்

இதில் ஒன்பது தொள் எனவும், நூறு ஆயிரம் எனவும் திரிந்தமை அறிக.

ஒன்று + பத்து = ஒருபான்
பத்து + இரண்டு = பன்னிரண்டு
நால் + பத்து = நாற்பது, நாற்பஃது

(ஒன்று முதலிய எண்ணுப் பெயருக்குக் காட்டியவை வேறு பிரதியிலுள்ள உதாரணங்கள்.)

2. அ + ஞாலம் = அஞ்ஞாலம்
அ + நூல் = அந்நூல்
அ + மணி = அம்மணி