212

'இதனோடுங் காந்திக்கு வேறுபாடென்னே?' எனின், காந்தி என்னும் உயிர் புகழ்ச்சிக்கண்ணும் பல வார்த்தையின்கண்ணும் அல்லால் வாராது: இஃதெல்லாவிடத்தினும் வரப்பெறும் எனக் கொள்க. இதனை மிகை மொழி எனவும் அமையும். தண்டியார் அதிசயாலங்காரம் என்பர்.

"உரையினும் புகழினு மன்றிவே றுயர்ச்சியிற்
பெருகச் சொல்லுதல் பெருக்கெனப் படுமே."

எனக் கொள்க.

"குலவார் மருங்கோர் கொலையுருவங் கொண்டு
நிலவார் மதிநேர் நிழற்றும்--புலவார்
முகனாறு வேல்வேந்த னாசரிதன் செம்பொன்
இகனாறு நீண்முடிமே லின்று."

இதனுள் உவமையாகிய மதியைப் பொருளாகிய குடையாக்கிக் குணன் நாட்டிச் சொன்னமையான், நோக்கு ஆயிற்று.

"மெய்ப்பொரு ணிற்ப வேறொன் றாக்கி
அப்படி யாக வியம்புத னோக்கே."

எனக் கொள்க.

ஏது என்னுமலங்காரமாவது, கூறிய பொருளுக்குக் காரக ஞாபகமாதியான ஏதுச் சொல்லுதல்.

அஃதாமாறு:

1"சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்."

இதனுட் 'சூழ்வார் கண்ணாக ஒழுகலே பொருளாகச் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்' என்று ஏது நாட்டிச் சொன்னமையால் ஏது அலங்காரமாயிற்று.

"இப்படி யாதலி னிப்படி யாயிற்
றென்னக் கிளப்ப தேது வாகும்."

எனக் கொள்க.

"கணவர்க்கு வந்தெய்துங் கால மலாமுன்
னுணர்வுசெய மாட்டா துணர்ந்து--துணர்மலிந்த
தாளார் முளரித் தடமலரைக் கூப்பினாள்
வாளார் திருநெடுங்கண் மாது."


1. திருக்குறள், 445.