215

"நவைதீ ரொன்ப தாகு முட்பொருள்
சுவைவாய்க் கிளப்பது சுவையென மொழிப."

எனக் கொள்க. ஊக்கமாவது,

"மலைகரந்து போகாதோ வற்றாதோ பௌவ
மலர்கதிரோன் வீழானோ வஞ்சி--நிலையெனக்குப்
பார்வேந்த ரொப்பரோ பாய்நீர்க் குருகுலத்தார்
போர்வேந்தே யான்முனிந்த போது."

என வரும்.

"தாக்கிய விடத்தெனைத் தடுப்பா ரியாரென
வூக்கங் கூறுத லூக்க மாகும்."

எனக் கொள்க.

"இவ்வயிற் கேட்டதோர்
பசுங்கதிர்த் திங்க ணாடிய செல்வ
னென்றி யெனக்குரை யின்றி யிரங்கென
மருளுந் தெருளும் வரம்பில பயிற்றி."

என இதனுள் வத்தவனை வணக்குற்றார் மன் மதிக் குலத்தனாதலிற் சந்திரனைத் தேடிப் போகின்றேன் என்று வேறொரு பரியாயத்தாற் சொன்னமையாற் பரியாய மொழியாயிற்று.

"பொருளினைப் புலப்பட் டிராமல் வேறொரு
பரிசினிற் கூறுதல் பரியா யம்மே."

எனக் கொள்க.

"வான்குணத் தெம்பிக்கு மன்னு பெருஞ்செல்வம்
யான்கொடுப்பேற் கெங்கோனு மிக்களித்தா - னான்போய்க்
கரும்பேறு நாட்டார்தங் காவலன்றன் றேவி
தரும்பேறு மற்றுண்டோ சாற்று."

என இதனுள் 'நான் கொடுப்பான் இருந்தவர்க்குத் தானும் உடன்பட்டான்' என்றமையால், துணைப்பேறு என்னும் அலங்காரமாயிற்று.

"நினைவுடைப் பொருளினை நிரப்புதற் கிதுவுந்
துணையெனப் படுவது துணைப்பே றென்ப."

இனி உதாத்தம் என்னும் அலங்காரமாவது, ஒருவன் இடவகையைத்தான், செல்வத்தைத்தான் பெருமை கூறுதல்.