219

(இ-ள்.) ஒருங்கியலும், பரிமாற்றமும், ஆசியும், விராவும், பாவிகமும் எனக் கிடந்த அலங்காரமு முன்பு தன்மை முதலாகச் சொன்ன அலங்காரமுமாக முப்பத்தைந்தலங்காரமுந் தண்டியாரால் விகற்பிக்கப்பட்டனவாம். இன்னமும் விகற்பிப்பார்க்கு மற்றும் பலவாய் வேறுபடும் (எ-று.)

"பூக்கால் புனைந்த புனவர் மடமக
ணோக்காநோக் குண்டாரை நோவதென்--நோக்காதே
கள்ள நிறையுங் கருங்கண்ணாற் கட்டழித்தா
ளுள்ள நிறையோ டொருங்கு."

என இதனுள் 'உள்ளங்கட்டழித்தான் நிறையோடும் ஒருங்கு,' என்றமையால், ஒருங்கியல் என்னுமலங்காரமாயிற்று.

"மறுவில் கூட்டம் பொருந்தி யொருங்கே
வருவ தொருங்கிய லென்மனார் புலவர்."

எனக் கொள்க.

1"சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து."

என 'இவையிற்றைக்கொண்டு இவை தந்தார்,' என்றமையால், பரிமாற்றம் ஆயிற்று. இதனை மாறாட்டு எனவும் அமையும்.

"இவைகொண் டிவையெனக் கீந்தன ரென்று
நவைதீர மொழிவது நவில்பரி மாற்றம்."

எனக் கொள்க.

ஆசியாமாறு:

"மிகைசேர்ந்த நாகமும் வெண்மதியுந் தம்மிற்
பகைதீர்ந்த மால்சடையோன் காப்ப--முகைமலரக்
கோழி யனுபமனன் கோரம் புலிவாழி
வாழிய மண்டலத்து வான்."

இஃது ஆசிப்பொருள் உணர்த்தினமையால், ஆசியென்க.

"அறநிலை மருங்கி னாசி யென்பது
புறநிலை வாழ்த்தெனப் புகன்றனர் புலவர்."

எனக் கொள்க.

விராவாவது, பல அலங்காரமும் படுவது.


1. திருக்குறள், 183.