221

வரலாறு:-

"நான்முகன் றோன்றிய தாமரை நின்னுடை
வாண்முகந் தன்னொடு மாறு."

இது உவமையைப் புகழ்தலால், புகழ்ச்சி உவமையாயிற்று.

"போது நற்புகழ்ச்சி பொருளைப் புகழா
தேதுவைப் புகழ்த லென்மனார் புலவர்."

எனக் கொள்க.

"அறுவாய் நிறைந்த வகன்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து."

இஃதுவமையைப் பழித்தலால், பழிப்புவமை.

"இழுக்கில் பொருளை உயர்த்தி யுவமையைப்
பழிக்கப் படுவது பழிப்பெனப் படுமே."

எனக் கொள்க.

"நின்முகம் பங்கயந் திங்க ளிவைமூன்றுந்
தம்மின் மறுதலிக்குஞ் சார்ந்து."

இவை ஒன்றிற்கொன்று தம்மின் மறுதலித்தமையால், விரோத உவமை.

"புகழ்பெறு பொருளும் பொருவு மொன்றையொன்
றிகழ்வது விரோத மென்மனார் புலவர்."

எனக் கொள்க.

"நின்முகந் திங்களோ டொக்கு மெனவுரைத்தே
னன்மையோ தீமையோ நாடு."

இது புலவன் கருதலால், கருத்துவமை.

"பொருந்திய பொருட்கிது பொருளெனக் கருதுதல்
கருத்தி னுவமை யென்மனார் புலவர்."

எனக் கொள்க.

"மான்விழி நின்முகத்த வாண்மதியின் கண்ணதுமா
னாகிலு மொக்கு மமர்ந்து."

இஃதுவமைக்கு ஒரு விசேடஞ் சொல்லி, அஃதப்படித்தாயினுமொக்கும் என்றமையால், இசையுவமை.


1. திருக்குறள், 1117.