227

"காவி கணைசெங் கயல்கதிர் வாளிவைநின்
வாள்விழிக் கொப்புரைக்க லாம்."

இது பலவியலுவமை.

"உயர்பொரு ளொன்றை யொக்கு முவமை
பலவுடன் கூறுதல் பலவிய லாகும்."

எனக் கொள்க.

"சந்திரனிற் றோன்றிற்றுப் போலுந்தண் டாமரையின்
வந்ததுபோ னின்வாண் முகம்."

இது விக்கிரியவுவமை.

"இத்துணைப் பொருவில்வந் தெதிர்ந்தது பொருளென
வத்துணை மொழிவரி னதுவிக் கிரியம்."

எனக் கொள்க.

இனிச் *சந்தானவுவமையாவது, உவமையும் பொருளுந் தொடர்ந்து சொற்சலிப்பது.

"கோபத்தின் மிக்குக் குவிகோலம் பெய்துவிடி
லாபத்தைச் செய்யு மனங்கன்போற் றாவாது
கோபத்தின் மிக்குக் குவிகோலம் பெய்துவிடி
லாபத்தைச் செய்யு மணிவா யணிமயிலே."

"தொலைப்பரும் பொருவையும் பொருளையுந் தொடர்ந்துசொற்
சலிப்பது பொருளுறிற் சந்தா னம்மே."

எனக் கொள்க. 

(15)

156. உவமையின் பொது இலக்கணம்

பட்டாங் குரைத்தல் புகழ்தல் பழித்தலிற் பண்புபயன்
சிட்டார் தொழில்வடி வாதி யுவமை செறிந்துறுப்புத்
தட்டா தியலும் பொருளு முவமையுஞ் சார்பொதுவாய்
முட்டா மலேநிகழ் காரண மும்பெறு மொய்குழலே !

இதனான் மேல் விரித்துக் கூறிய உவமையின் பொது இலக்கணந் தொகுத்துரைக்கின்றான்.

(இ-ள்.) ஒரு பொருளை ஒன்றோடுவமிக்கும் இடத்துப் பட்டாங்கால் உவமித்தலும், புகழ்தலால் உவமித்தலும், பழித்தலால்


* "இதனோடு தமிழ்த் தண்டியலங்காரத்தார் மதம் மாறுபடும். அவர் கூறிய உதாரணங் கோவையுவமையாமென மறுக்க," என்பது பழைய குறிப்பு.