25. சில நிலைமொழி ஈற்றொற்றும் ஈற்றயல் அகரமும் உயிராதல் உயிர்மெய்யாதல்
வரின் அடையும் விகாரமும், சிலவிடத்து வருமொழி முதலுயிர் கெடுதலும், நிலைமொழி
ஈற்றுயிர் கெடுதலும், ல ன ள ண ம னக்கள்
ஒன்றுக்கொன்றாய் வருதலும்
நின்றசொல் லீற்றுமெய்ம் முன்னா முதலுயிர் நீண்டுமெய்யும்
பொன்று முயிரொ டுயிர்மெய்வந் தால்;வந்த ஆவியும்போய்க்
குன்று மொரோவழி; கூறிய ஆவி யொரோவழிப்போம்;
அன்றி லனள ணமனக்க ளொன்றுக்கொன் றாவனவே.
(இ-ள்.) நின்ற சொல் ஈற்றுமெய் முன்னா முதலுயிர் நீண்டு மெய்யும் பொன்றும் உயிரொடு உயிர்மெய் வந்தால் - 1 வருமொழிக்கு முதலாக உயிராதல் உயிர்மெய்யாதல் வந்து புணர்ந்தால், நிலைமொழியீற்றயலில் நின்ற அகாரமானது ஆகாரமாக நீண்டு நிலை மொழியினது ஈறுங்கெடும்; வந்த ஆவியும் போய் குன்றும் ஒரோவழி - ஒரோவிடத்து வருமொழி முதல் உயிர் கெடுதலுமுண்டு; கூறிய ஆவி ஒரோ வழிபோம் - 2 ஒரோவிடத்து நிலைமொழியினது ஈற்றயலுயிர் கெடுதலுமுண்டு ; அன்றி ல ன ள ண ம
வழக்கில், உதித்தது நிலவு, உதித்தது நிலா என ஆகாரங் குறுகி அதனுடன் உகரம் பெற்றும் இயல்பாகியும் வரும் எனவும், செய்யுளில், 'நிலவிரி கானல்வாய்' என ஆகாரங் குறுகுதல் மாத்திரம் பெற்றும், 'இறவுப் புறத்தன்ன' என ஆகாரங் குறுகுதலுடன் உகரம் பெற்றும், 'நிலா வணங்கும் வெண்மணன்மேல்' என இயல்பாகியும் வரும் எனவும் கொள்க.
1. மரம் + அடி = மராடி
குளம்+ ஆம்பல்= குளாம்பல்
கோணம் + கோணம் = கோணாகோணம்
இவற்றுள், முதலிரண்டில் ஈற்றயல் உயிர் நீண்டு, ஈற்றொற்றும் வருமொழி முதலுயிருங்கெட்டன. மூன்றாவதில் ஈற்றயல் நீண்டு ஒற்றுக் கெட்டது.
2. போன்ம், மருண்ம்
போலும், மருளும் என்னும் செய்யும் என் வாய்பாட்டு முற்றுச் சொற்கள் ஈற்றயல் உயிர்கெட்டு, மகரத்தை நோக்கி லகர ளகர மெய்கள், னகர ணகர மெய்களாய்த் திரிந்து இவ்வாறு நின்றன என்றறிக.