"இதுவெனி னிதுவிதற் கில்லென்று சொல்ல
லந்நிய வுவமை நிலையா கும்மே."
"தவளை யுகளுந் தடம்புனனீர் நாட
னிவளை வளைகரந்தா னென்றாற்--றவளத்
தனிக்காவல் வெண்குடையான் றண்ணளியு மஃதே
யினிக்காவ லாமோ வெமக்கு."
இஃது எழுத்து வழி நிலை.
"மாதரான் மாதர்நோக் குண்ட மடநெஞ்சங்
காதலார் காதன்மை காணாதே--யேதிலார்
வன்சொல்லான் வன்பொறை சொல்லிலெழின் மானோக்கி
யின்சொல்லா லின்புறுமோ வீங்கு."
இது மொழி வழிநிலை
"வழிமொழி யணியே வகுக்குங் காலை
எழுத்துஞ் சொல்லு மிசைபல வாகி
வழிதொடர்ந் தொலிப்ப வகுத்த லாகும்."
"எழுத்தின் வழிநிலை யிசைதொடர்ந் திசைக்கு
மொழியின் வழிநிலை மொழிவயி னிலையே."
1"விண்ணிடை யிழிந்து வந்த விண்ணவர் கிழவ னொப்பான்
மண்ணிடை யொல்லை யிங்கோர் பொருளென வருந்தி வந்த
தெண்ணிடை யுணரு மந்தா ரத்திடை கடுநே ரன்றாற்
கண்ணிடை யுமிழுஞ் செந்தீக் கடாக்களிற் றுழல்வ வென்றான்."
இஃது உயரக் கூறினமையால், உயர்பு ஆயிற்று.
"மன்ன ரொளிமுடிமேன் மாணிக்கங் கால்சாய்த்து
மின்னி விரிந்த வெயிற்கதிர்க--டுன்னி
யடிமலர்மேற் சென்றெறிப்ப நின்றா னவிரொண்
கொடிமலர்வேய் நீண்முடியெங் கோ."
இது மாணிக்கச் சிறப்புரைத்தமையால், அருங்கலவுயர்வு ஆயிற்று.
"இயன்ற செய்யுட் கிசைந்த நடையா
லுயரக் கூற லருங்கல மொழிதலென்
றுயர்பிரண் டென்ப ருயர்ந்தோர் தாமே."
"செந்தா மரையா ளமர்ந்தாடுஞ் செய்குன்ற
மந்தாரப் பூஞ்சோலை மங்கையர்க்குக் - கொந்தார்
1. சூளா. கல்யாணச் சருக்கம், 144.