235

"தலையிலமர் கங்கைத் துகிலுடையன் றங்கைச்
சிலையினமர் செங்கண்மால் பாக--னிலையினமர்
தானவரைக் கொன்று விழவுகெடுத் தான்றனியே
வானவரெல் லாமதிக்க வந்து".

இது பண்புப் பதத்தால் பொருளேற்றமையால், பண்புருவகம்.

"ஒண்பொருட் பெற்றி யுற்றதற் குரிய
பண்பொடு கிளப்பது பண்புரு வகமே".

எனக் கொள்க.

1"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு".

இது விரியுருவகம்.

"கருதிய பொருளைக் கலையிற் றொகாமல்
விரியத் தொடுப்பது விரியுரு வகமே".

எனக் கொள்க.

"மதர்த்துச் சிவந்தநின் வாண்முகத் திங்கட்
பதத்திலெழுஞ் செம்மைவளம் பாரின்--வதைத்தெனுடல்
வெந்துமத ராக மிகுக்க வொளிமாறாய்த்
தந்து மிகைத்தியலுந் தான்."

இது உவமையே யுருவகமாக வந்தமையால், உவமையுருவகம்.

"ஒண்டரு பொருளை யுருவக மாக்குத
லுண்டெனி னுவமை யுருவக மாகும்,"

எனக் கொள்க.

"சோதி மேவிய கரத்தொடு தோன்றிய
மாத ராயினோர் வாண்முகத் திங்களே."

இது சிலேடையுருவகம்.

"நயம்படு சிறப்பி னவைதீ ரிருபொருட்
கியம்புதல் சிலேடை யெனுமுரு வகமே."

எனக் கொள்க.

"பெண்ணைப் பறவைக் குரன்முழக் காய்ப்பிறை வாளுருவி
வண்ணக் கருங்கடல் வட்டத்தை யேந்தி மதிபுலியூ
ரண்ணற் சிவன்கொன்றை யந்தார் நினைந்தவெ னாருயிரை
"யுண்ணத் திரிதரு மந்தியென் னாநின்ற யோகினியே."

இது சகல உருவகம்.


1. திருக்குறள்,358.