237

"புருவச் சிலைகுனித்துக் கண்ணம்பென் னுள்ள
முருவத் துரந்தா ரொருவ-- ரருவி
பொருங்கற் சிலம்பிற் புனையல்குற் றேர்மேன்
மருங்குற் கொடிநுடங்க வந்து".

இது அவயவியைச் சொல்லாதே அதனுறுப்புக்களை வேறுபடுத்து உருவகஞ் செய்தமையான், உறுப்புருவகம் ஆயிற்று.

"அவயவி யொழிய வவயவந் தன்னை
யுருவகஞ் செய்வ துறுப்புரு வகமே."

எனக் கொள்க.

"பொங்களக மல்ல புயலே யிவையிவையுங்
கொங்கை யிணையல்ல கோங்கரும்பு--மங்கைநின்
மையரிக்க ணல்ல மதர்வண் டிவையிவையுங்
கையல்ல காந்தண் மலர்.

இது உண்மைப் பொருளை மறுத்து ஒப்புமைப் பொருளையுடன்பட்டமையால் தத்துவாபன வுருவகம்.

"உண்மைப் பொருண்மறுத் தொப்புமைப் பொருண்மேற்
தன்மைசெ யுருவகந் தத்துவா பனமே",

எனக் கொள்க.

"தேனக் கலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே
கூனற் பவளக் கொடியாகத்--தான
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்
புழையார் தடக்கைப் பொருப்பு".

இது பலபொருளுந் தம்மில் இயையாமல் உருவகஞ் செய்தமையால், இயைபிலியுருவகம்.

"பலபொருள் இயையாப் பண்பின் வருவ
தியைபிலி யுருவக மென்மனார் புலவர்".

எனக் கொள்க.

"கார்குழை சேர்ந்த கதிர்வாண் மதிமுகமு
மேர்கெழு தென்றலு மென்னிடையே--சேரத்
துயர்விளைப்ப வாயினாற் றீவினையால் வந்த
மயனினைப்ப தாமளவோ மற்று."

இது 'எல்லார்க்கும் இனிய நின் முகமும் இளந்தென்றலும் எனக்குத் துயர் விளைப்ப' என்று கூறிப் பின்னர்ச் சமாதானங் கற்பித்தமையால், சமாதானவுருவகம்.