238

"கைகாந்தள் வாய்குமுதங் கண்ணெய்தல் காரிகையே
மெய்வார் தளிர்கொங்கை மென்கோங்கென்--றிவ்வனைத்தும்
வன்மைசேர்ந் தாவி வருத்துவது மாதவமொன்
றின்மையா லன்றோ விவர்க்கு."

இதுவும் அது.

"சீரிய வுருவகஞ் செப்பிற் பயன்றரக்
காரணங் கற்பித்தல் சமாதான மாகும்."

எனக் கொள்க.

"வையம் புரக்குமான் மன்னவநின் கையிரண்டும்
பொய்யின்றி வானீர் பொழிகாருங்--கையா
மிருகார்க்கு மில்லைப் பருவ மிடிக்கு
மொருகார் பருவ முடைத்து."

இது உருவகங் கூறிப் பின் வேற்றுமையைச் சொல்லுதலால், விதிரேகவுருவகம்.

"ஏற்றிய பொருள்க ளிரண்டினு மியல்பாம்
வேற்றுமை கூறிலது விதிரே கம்மே."

எனக் கொள்க.

"மாதரா யுன்றனது வாண்முகமாந் திங்களுக்குந்
தீதிலா மானின் றிருவிழிக்கு--மோதிலிருங்
காதலு ளாரைக் கடுந்துயரஞ் செய்வதே
பாதி யமையும் பரிசு."

இது தனக்குத் துயர் செய்தல் உட்கொண்டு நின்று சந்திரனும் மான்விழியும் தங்குணத்தைத் தடுத்த தன்மையால், தடைமொழியுருவகம்.

"இணங்கிய பொருள்க ளியையுங் குணத்தை
விளங்க விளம்புந் தடைமொழி யுருவகம்."

எனக் கொள்க.

"அத்தகு நின்றன் முகக்கமல வாளரங்கி
லொத்தபுரு வக்கொடிமுன் னோங்குமே--வித்தகஞ்சே
ராடல்புரிந் தாளென் றுரைத்தா னவனியெல்லாங்
கோடல்புரிந் தானுறைந்தைக் கோ."

இது உருவகத்தை உருவகஞ் செய்தமையால், உருவகவுருவகம்.