239

"உருவகந் தன்னை யுருவகஞ் செய்வ
துருவக வுருவக மென்மனார் புலவர்."

எனக் கொள்க.

"காலன் மதத்தாற் சிவந்துகயல் போன்றவிழி
நீலோற் பலமு முடையநின்--கோலமுகத்
தாடவர்கள் சால வருந்துயர மெய்துவரே
யூடலெளி தன்றென் றுணர்ந்து."

இது பல வுறுப்புக்களுள்ளும் ஒன்றையே உருவகஞ்செய்தமையால், ஏகாங்கவுருவகம்.

"ஒன்றி னுறுப்புப் பலவற்றி னுள்ளு
மொன்றினை யுருவக முரைப்ப தேகாங்கம்."

எனக் கொள்க.

"பிற வந்தனவு நேர்ந்தறியே."

என்றமையால்,

1"இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா
வரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனி
லரங்க மணிபொழிலா வாடு மாயின்
மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்."

எனக் குயில் முழவாகவும், தேன் யாழாகவும் பொழில் அரங்கமாகவும் உருவகஞ் செய்து, இளவேனில் என்னுங் கூத்தனென்று எடுத்த உருவகத்தை முற்றுவியாது வரும் ஏகதேசவுருவக முதலியனவுங் கொள்க. 

(16)

160. பிற பொருள் வைப்பணியின் வகை

தேரும் பொதுவே சிறப்பு நிலையே சிலேடையன்றி
யேரும் முரணியை போடியை பின்மை யியைபுதம்மிற்
பேரும் விரவிய லேநற் பிறபொருள் வைப்புத்தண்டி
சீரும் பொலிவு மலியுந் தன்னூலினிற் செப்பியதே.

(இ-ள்.)*பொதுப் பிறபொருள் வைப்பும், சிறப்பு நிலைப் பிற பொருள் வைப்பும், சிலேடைப் பிறபொருள் வைப்பும், முரண் பிற


1. யாப்பரு. வி; மேற்கோள்.

* "பொதுப்பிற பொருள் வைப்பையும், சிறப்புநிலைப் பிறபொருள் வைப்பையும் முறையே முழுதுஞ் சேறல் என்றும் ஒரு வழிச் சேறல் என்றும் பெயரிட்டு வழங்குவாருமுளர்." என்பது பழைய குறிப்பு.