னக்கள் ஒன்றுக்கொன்று ஆவனவே - 1 இவையல்லாமலும் லகாரத்துக்கு னகாரமும் ளகாரத்துக்கு ணகாரமும் மகாரத்துக்கு னகாரமும் ஒன்றுக்கொன்று ஆதேசமாம் (எ-று.)
(25)
26. சுட்டுப்பெயர் அடையும் வேறுபாடுகள்
கூறிய சுட்டின்பின் னாய்தமுங் கூடும்;சுட் டீற்றுகரம்
மாறி யுயிரிரண் டாவது மாம்;வந்த சுட்டொருகால்
வீறுடை நெட்டெழுத் தாகும்; அளபும் விரிந்துநிற்கும்;
நூறுடை வெள்ளிதட் டாமரைக் கோயி னுடங்கிடையே !
(இ-ள்.) கூறிய சுட்டின் பின் ஆய்தமுங் கூடும் - 2நிலைமொழிச் சுட்டெழுத்தின் பின்னர் ஆய்தமும் வரப்பெறும்; சுட்டீற்று உகரம் மாறி உயிர் இரண்டாவதுமாம் - 3 நிலை மொழிச் சுட்டினது ஈற்றின் நின்ற உகரமானது கெட்டு இரண்டாம் உயிர் பெறுதலும் உண்டு ; வந்த சுட்டு ஒருகால் வீறுடை நெட்டெழுத்தாகும்- 4 ஒரோவிடத்து வருமொழிச் சுட்டு நீளுதலும் உண்டு; அளபும் விரிந்து நிற்கும் - அந்நீளுதலுடனே அளபெடுத்தலுமுண்டு (எ-று.)
1. நிலம் = நிலன், நலம் = நலன்.
லகரத்துக்கு னகரமும், ளகரத்துக்கு ணகரமும் வருதற்கு உதாரணங்கள் வந்தவழிக் காண்க.
2. அது = அஃது
இது = இஃது
உது = உஃது
3. அது + அன்று = அதான்று
முன் சூத்திரத்தில் 'வந்த ஆவியும் போய்க் குன்றும்' என்றமையால், வருமொழியாகிய அன்று என்பதன் முதலில் உள்ள அகர உயிர் கெட்டது. (இது வேறு பிரதியில் உள்ள உதாரணம்.)
4. அங்கு = ஆங்கு
இங்கு = ஈங்கு
உங்கு = ஊங்கு
வட + அது = வடாஅது
குட + அது = குடாஅது
குண + அது= குணாஅது
(இவையும் வேறு பிரதியில் உள்ள உதாரணம்.)